தல பட்டம் இனி தேவையில்லை – நடிகர் அஜித்

தல பட்டம் இனி தேவையில்லை – நடிகர் அஜித்

தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் த்ன்னை இனி யரும் தல என அழைக்க கூடாது என அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது அஜித், விஜய் ஆகியோர் தான் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். இதில் நடிகர் விஜயை ரசிகர்கள் தளபதி என அழைத்து வருகின்றனர். அதே போல் நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் பல காலமாக தல என்றே அழைத்து வருகின்ற்னர் இந்த நிலையில இனி தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ்சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம்…
Read More
தல-தளபதி படங்கள் ரிலீஸ் தேதி!

தல-தளபதி படங்கள் ரிலீஸ் தேதி!

  கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு திரைத்துறை இப்போது தான் மூச்சு விட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மீண்டும் மக்களை தியேட்டர் நோக்கி இழுத்து வந்தது. ரஜினியின் அண்ணாத்த கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், தீபாவளிக்கு தியேட்டர்கள் கலைகட்சியதென்னவோ உண்மை. அடுத்தடுத்து விஜய், அஜித் படங்கள் முதலாக பல பெரிய நடிகர்களின் பெரும் பட்ஜெட் படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு பக்கம் நேரடி தமிழ் படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் வேளையில் பல தெலுங்கு படங்களும் கூட தமிழிலும் இணைந்து பன்மொழி தயாரிப்பாக உருவாகி, ரிலீஸுக்கு காத்திருக்கின்றன வரும் மாதங்களில் அடுத்தடுத்த மாதங்களில் என்னென்ன படங்கள் ரிலீஸை உறுதி செய்து, தியேட்டருக்கு வரவுள்ளது என்பதை பார்க்கலாம். முதலில் அடுத்த வாரத்தில் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படம் நவம்பர் 25 அன்று வெளியாகிறது. இப்ப்டத்துடன் சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் படமும் நவம்பர் 25 அன்று வெளியாகிறது. அடுத்து…
Read More
விவேகம் சூப்பர் ஹிட் – ஃபோர்ப்ஸ் டெய்லி தகவல்!

விவேகம் சூப்பர் ஹிட் – ஃபோர்ப்ஸ் டெய்லி தகவல்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு மாறி மாறி ஒரு குழப்பமான விமர்சனங்கள் வந்துள்ளன. குறிப்பாக புளூசட்டை என்ற அடைமொழிக்காரரான மாறன் என்பவரது விமர்சனம், கோலிவுட் அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய விமர்சனத்துக்கு திரையுலகினர் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். அதே சமயம் 'விவேகம்' படத்துக்கான எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து இயக்குநர் சிவா, “எதிர்மறை விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் பலரும் இப்படத்துக்கு நல்ல விமர்சனங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய முயற்சிக்கு கிடைத்த பாராட்டால் நன்றி கடன்பட்டு இருக்கிறேன்.தண்ணி அடிப்பது, தம் அடிப்பது, ஆபாசமாக ஒரு வசனம் எதுவுமின்றி ஒரு நேர்மையான திரைப்படம் என்று பலரும் தெரிவித்த கருத்தால் நெகிழ்ந்திருக்கிறேன். அஜித் சாரின் உறுதுணைக்கும், ரசிகர்களின் உறுதுணைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்மறை விமர்சனங்களை நான் பார்ப்பதில்லை. நியாயமான விமர்சனங்களைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்டுள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ் அனைத்தையுமே…
Read More
அஜித் சாருக்கு சிலையா? -இயக்குநர்  சிவா அப்செட்!

அஜித் சாருக்கு சிலையா? -இயக்குநர் சிவா அப்செட்!

திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்தில் அஜித்துக்கு சிலை அமைக்க, அவருடைய ரசிகர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார்கள். மேலும், அஜித் சிலையின் புகைப்படங்களும் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக "அஜித்துக்கு சிலை வைப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே. இது குறித்து அஜித்திடம் ஏதேனும் பேசியுள்ளீர்களா" என இயக்குநர் சிவாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, "அஜித் சாருக்கு இது சுத்தமாக பிடிக்காது. அவர் இதை விரும்பவே மாட்டார். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ரசிகர்களாக இருக்கட்டும், படம் பார்க்க வருபவர்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அஜித் சார் எப்போதும் சொல்வது ஒன்று தான். அம்மா, அப்பா, பார்க்கும் தொழில் அது தான் முக்கியம். அது போக தான் மற்றது அனைத்துமே. நல்ல படங்கள் யாருடையதாக இருந்தாலும், திரையரங்கில் போய் பார்த்து சந்தோஷமடைந்து, அதிலிருந்து ஒரு சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு போய் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் ஜெயிப்பது மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கும்.…
Read More