தமிழ் சினிமாவின் பொன் மகுடம் ஜெய்பீம் !

0
284

இயக்கம்.செ.ஞானவேல்

நடிகர்கள்சூர்யா, மணிகண்டன், லியோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ்

கதைமனிதனின் அடிப்படை உரிமைகளே மறுக்கப்படும், கள்ளர் இனக்குழுவில் ஒரு சிலரை, ஒரு கொள்ளைவழக்கில் போலீஸ் தவறுதலாக கைது செய்து போகிறது.  அவர்களை சித்தரவதைக்கு உள்ளாக்கி குற்றத்தைஒப்புக்கொள்ள சொல்கிறது. அதில் அவர்கள் தப்பி விட்டதாக அவர்களின் குடும்பத்திடம் சொல்ல, கணவனைகாணாத மனைவி, தன் கணவனை மீட்டு கொடுக்க சொல்லி வக்கீல் சந்த்ருவை அணுகுகிறார். அவர்களைநீதிமன்றம் மூலம் கண்டுபிடிக்கிறாரார சந்த்ரு என்பது தான் கதை.

தமிழ் சினிமாவுக்கு மிக நீண்ட காலம் கழித்து ஒரு அற்புதமான படைப்பாக பலரது மனதையும் கலங்கடிக்கும்படைப்பாக உருவாகி, வந்திருக்கிறது ஜெய் பீம்.

ஒரு இனக்குழு மொத்தமாக அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை, அவர்களின் உரிமைகள்மறுக்கப்பட்டதை, அவர்களின் வாழ்வியலோடு நெருங்கி, அச்சு அசலாக இரத்தமும் சதையுமாக  ஒருஅற்புதமான படைப்பாக உருவாக்கியதற்கு மொத்த குழுவிற்கும் பூங்கொத்துக்கள்.

ஒரு படம் என்ன செய்ய வேண்டும் சமூகத்தின் பிரச்சனைகள் பேச வேண்டும், உண்மையை உரக்க பேசவேண்டும் என்பதெல்லாம் அப்புறம் தான், முதலில் ஒரு படைப்பு நம் மனதை நெருங்க வேண்டும் நம்உணர்வுகளை பாதிக்க வேண்டும் அது தான் ஒரு சிறந்த படைப்பாக மாற முடியும். தமிழகத்தின் நடந்த உண்மைசம்பவங்களின் அடிப்படையில் மிக அழகாக ஒரு கதையை கோர்த்து, அதற்கு சிறப்பான திரைக்கதையைஎழுதி, அதை திரையில் எந்த வித தங்குதடையுமில்லாமல், ரத்தமும் சதையுமான உணர்வுபூர்வமான படைப்பாகமாற்றியதில் மொத்த படக்குழுவும் வென்றிருக்கிறது.

இருளர் குடியிருப்பு, அவர்கள் வாழ்வியல் அவர்களின் அப்பாவித்தனம், அத்தனையும் அத்தனை துல்லியமாகநுண்ணிய விவரங்களோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எலி பிடிக்கும் அந்த முதல் காட்சியே இது வேறுமாதிரியான படம் என்பதை முகத்தில் அடித்து சொல்லி விடுகிறது. பாம்பு பிடிக்கும் காட்சி,  அவர்கள்விலங்குகளை வேட்டையாடும் காட்சிகள் என அத்தனையும் தமிழ் சினிமாவுக்கு புதுசு.

கள்ளர் குடியிருப்பிலேயே சென்று படமாக்கியுள்ளதும், அவர்களையே படத்தில் நடிக்க வைத்திருப்பதும் சிறப்பு. மணிகண்டன் கள்ளர் இன இளைஞனாக அசத்தியிருக்கிறார். எங்குமே அவரின் வேறு முகம் தெரியவில்லை. லியோ மோல் சிவப்பு மஞ்சள் நாயகியாக  இவர் என ஆச்சர்யப்பட வைக்கிறார். கள்ளர் இனப்பெண்ணாகமொழி முதற்கொண்டு அவர்களின் உடல் நளினத்தை நடிப்பில் கொண்டுவந்து, கணவனை பிரிந்து ஏங்கும்பிள்ளைதாச்சி பெண்ணாக மனதை கலங்கடித்துவிட்டார்.

கெட்டவர்கள் எவ்வளவு சிறப்பாக நடிக்கிறார்களோ அதைப் பொறுத்துதான் அடிபடும் எளியவர்களின் வலிநமக்கு புரியும் அந்த வகையில் போலீஸாக வரும் அனைவருமே மிக தத்ரூபமாக நடித்து அசத்தியுள்ளார்கள். அதிலும் அந்த இன்ஸ்பெக்டராக வருபவரின் உடல்மொழியும் பார்வையும் அசரடிக்கிறது. போலீஸின்தந்திரங்களை கைக்கொள்ளும் நடிப்பு அபாரம். பிரகாஷ்ராஜ் சின்ன பாத்திரம் என்றாலும் பச்சக்கென மனதில்ஒட்டுகிறார்.

சூர்யா இவரைப் பற்றி தனிக்கட்டுரையே எழுதலாம் ஒற்றைப்படத்தில், தன்னை வாழவைத்த தமிழகத்திற்குகைமாறு செய்திருக்கிறார். ஒரு நட்சத்திர. நடிகர் எளிதில் ஏற்காத பாத்திரத்தை ஏற்று, முழுப்படத்தையும் தன்தோளில் தாங்கி, படத்தின் பலத்தை பன்மடங்கு கூட்டியுள்ளார். டூயட் இல்லை சண்டை இல்லை, ஆனால் படம்முழுதும் உயிர் இருக்கிறது. சந்துருவாக அவரது பாத்திரம் தமிழ் சினிமாவில் நெடுநாள் வாழும்.

ஒளிப்பதிவு கண்களை கொள்ளை கொள்கிறது 1994 ஆம் ஆண்டு என்பதை அழகாக திரையில்கொண்டுவந்ததில்,  எஸ் ஆர் கதிர் ஜெயித்திருக்கிறார். இருளர் குடியிருப்பு காட்சிகள், ஹைகோர்ட்காட்சிகளில் பர்பரப்பை கேமராவே செய்து அசத்துகிறது. ஷான் ரோல்டனின் இசை படத்திற்கான நியாயத்தைசெய்திருக்கிறது. படத்தில் மூன்று பாடல்கள் ஆனால் படம் பார்க்கும் போது அது பாடல்களாக தோன்றாமல்அவர்களின் வாழ்க்கையை பார்ப்பதாகவே படத்துடன் சேர்ந்து பயணித்துள்ளது இசை.

இந்தபடத்தின் மிகப்பெரும் பலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வரும் நுண்ணிய விவரங்கள் தான், பாம்புபிடிக்கும் போது தலையை தட்டி பிடிப்பது, இருளர்களின் வாழ்வியல், கோர்ட்டுக்கு கணவனை தேடி வரும்மனைவியும், குழந்தையும் ஹைகோர்ட் கட்டத்தை பிரமிப்புடன் திரும்பி திரும்பி அண்ணாந்து பார்ப்பது, போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சித்தரவதை காட்சி விவரணைகள் என எல்லா காட்சியிலும் அத்தனைதுல்லியம். படத்திற்கு தேவையற்ற காட்சி என ஒன்று கூட படத்தில் இல்லாதது படத்தின் மிகப்பெரும் பலம். தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத ஒரு படைப்பை தந்து வென்றிருக்கிறார் இயக்குநர் . செ. ஞானவேல்.

படத்தின் குறைகளாக சொல்ல பெரிதாக ஏதுமில்லை, வெகு சில இடங்களில் சூர்யா பாத்திரத்திற்கு பலம்வேண்டுமென காட்சி வைக்கப்பட்டிருப்பதாக தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நீதிபதிகள் சூர்யாசொல்லும் அனைத்திற்கும் தலையாட்டுகிறார்கள், சூர்யாவும் ஒவ்வொரு காட்சியிலும் சூப்பர் ஹீரோ போல்வாதாடி சாட்சியங்களை திணறடிக்கிறார். போலீஸ் பொய் கேஸ் போடும் தான், ஆனால் இத்தனை கொடூரம்புரியுமா? உண்மையில் நடந்திருக்கிறது என்றாலும் அது திரையில் அவசியம் தானா ? மிக சிறிய எளியகுறைகள் களைந்து விட்டால், மனதிற்கு நிறைவு தரும் அற்புதப்படைப்பு ஜெய்பீம்

தமிழ் சினிமாவின் பொன் மகுடம் ஜெய் பீம்