‘சீயான் 62’ இல் இணைந்த மலையாள பிரபலம் சுராஜ் வெஞ்சாரமூடு!

‘சீயான் 62’ இல் இணைந்த மலையாள பிரபலம் சுராஜ் வெஞ்சாரமூடு!

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, 'சீயான் 62' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் 'சீயான் 62' எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன்முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.…
Read More
சூர்யாவின் 43வது பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது! மீண்டும் சூரரை போற்று கூட்டணி !

சூர்யாவின் 43வது பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது! மீண்டும் சூரரை போற்று கூட்டணி !

  சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். 'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் 'சூர்யா 43' படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின்…
Read More
ஒருவர் மட்டுமே நடித்த “ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ஒருவர் மட்டுமே நடித்த “ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  Sai Baba Pictures சார்பில், இயக்குநர், நடிகர் ஜி. சிவா நடித்து தயாரித்துள்ள திரைப்படம் “ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா” . இந்திய திரையுலகில் மிக அசாதாரண முயற்சியாக ஒரே ஒரு கதாபாத்திரம் பங்குபெறும் இப்படம் வரும் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை இன்று சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. இசையமைப்பாளர் மணிசேகரன் செல்வா பேசியதாவது, இது எனக்கு முதல் படம் , இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் சிவா சாருக்கு நன்றி, இந்தப் படத்தில் நிறைய விறுவிறுப்பான காட்சிகள் உள்ளது. அது போல பல டிவிஸ்ட்கள் காத்திருக்கிறது உங்களுக்கு பிடிக்கும். ஸ்டண்ட் காட்சிகளில் சிவா சார் அருமையாக நடித்துள்ளார், படம் நன்றாக வந்துள்ளது நான் படம் பார்த்துவிட்டேன் , உங்களுக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள்தான் மக்களிடம் இதை கொண்டு போய் சேர்க்க வேண்டும், நன்றி. ஒளிப்பதிவாளர்…
Read More
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும் சமீபத்தில் ‘பத்து தல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் ’கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரத்திலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று படத்தின் புரோமோ டீசரை வெளியிடுவதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மேலும் நான்கு மொழிகளில் விரைவில் டீசர் வெளியாகவுள்ளது.…
Read More
கல்விக்கு பணம் கிடைக்காமல் ஏங்கியுள்ளேன்! சிவக்குமாரின் உருக்கமான பேச்சு!

கல்விக்கு பணம் கிடைக்காமல் ஏங்கியுள்ளேன்! சிவக்குமாரின் உருக்கமான பேச்சு!

  திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜ் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.ஞானபிரகாசம் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், 'குறள் வழி கல்வி'…
Read More
விருமன் குடும்பத்தின் வெற்றி விழா!

விருமன் குடும்பத்தின் வெற்றி விழா!

விருமன் குடும்பத்தின் வெற்றி விழா! சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வசூல் வாகை சூடி வருகிறது விருமன்.     இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் #விருமன் வெற்றி விழா, சென்னை வி ஜி பி கோல்டன் பீச் ரிசார்ட்ஸ் இல் நடந்தது. விழாவின் முதலில், நடிகர் ஜெகன் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு வழியாக அழைத்து விளையாட்டு போட்டிகளை வைத்து அதற்கு பரிசுகள் கொடுத்து, ஊக்கப்படுத்தி சந்தோஷப்படுத்தினார். வையாபுரி, டீனா, முத்து, கலைராணி, இர்பான், சரவணன், செல்வா குடும்பத்தினர்கள், அனைவரும் மேடையில் சந்தோசமாக நடனமாடினார்கள். கலைராணி இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு பயிற்சி அளித்தது நான் தான் என்றார். இந்திரஜா பேசும்போது, சூரி சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் சென்று படம் பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்களே திரும்ப திரும்ப…
Read More

நியாயத்தின் பக்கம் நிற்பாளா கார்கி?- கார்கி விமர்சனம்

கார்கி பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட தன் அப்பா நிரபராதி என நிரூபிக்க போராடும் ஆசிரியாய் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கதை. படத்தின் மிகப்பெரிய பிளஸ் படம் ஆரம்பிக்கும் இடமும், முடியும் இடமும் தான். சிறிது நேரம் கூட தாமதிக்காமல் முதல் பிரேமில் இருந்து கதைக்குள் போக ஆரம்பித்துவிட்டார்கள். எடுத்துகொண்ட கதைக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து படத்தை நிமிர செய்துவிட்டார் படத்தின் எழுத்தாளர். லைவ் சவுண்ட், லைவ் லோகேஷன், நிஜத்தில் வாழும் கதாபாத்திரங்கள் என படத்தை நம்முடன் இணைக்க கடினமாக உழைத்து அதில் வெற்றி கண்டு இருக்கிறார்கள் படக்குழு. ஒளிப்பதிவாக இருக்கட்டும், எடிட்டாக இருக்கட்டும், இசையாக இருக்கட்டும் தனியாய் தெரியாமல் கார்கி உலகத்தோடு இணைந்திருக்கிறது. அதுவே திரைப்படத்தை மிகச்சிறப்பாக மாற்றி இருக்கிறது. அடுத்தாக இந்த திரைப்படத்தின் நடிகர்கள் பற்றி கூற வேண்டும். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். முதலில் இந்த படத்தில் ஆச்சர்ய…
Read More
சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’ !

சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’ !

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் இணைந்து தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா அவர்களும் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் ராஜசேகர் பாண்டியன் மற்றும் சிக்கா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக…
Read More
அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் படமே ’ஓ மை டாக்!’

அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் படமே ’ஓ மை டாக்!’

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், '' ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம் போல்…
Read More
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம்

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம்

2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் "சூரரைப் போற்று" 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால்  ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமி குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இத்திரைப்படத்தின் பின்னணி வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு இது சர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது.…
Read More