25
Jan
2024-ல் தை பிறந்ததும் வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம்.அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம்.இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர்,அயலான்,மெரி கிரிஸ்மஸ்,ஹனுமான் மற்றும் மிஷன் சாப்டர்-1ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது. மிஷன் சாப்டர் 1 ஆக்க்ஷன் காட்சிகளை பார்க்கும் பொழுது ஹாலிவுட் படம் பார்ப்பது போல் பிரம்மிப்பாக உள்ளது. பொதுவாக படத்தில் சண்டை என்றால் ஹீரோவுடன் ஒருவர் அல்லது நான்கு ஐந்து பேர் மோதலாம் இதில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை காட்சிகள் படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது படம் எப்படி…