10
May
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தலைவரின் 169 படத்தை இயக்குவார் என்ற செய்தி தற்போது ஒருவழியாக உறுதியாகி போச்சு. அனிருத் இசையமைக்க, இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இவர்களுடன் ரம்யா கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அந்த படத்திற்கு தமிழ் அல்லாது வேறு ஒரு மொழியில் இருக்கும் நாயகர்களை போட்டால் படம் இன்னும் நன்றாக வரும் என்ற எதிர்பார்ப்பில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை அணுகினர். அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஏற்கனவே மாரடைப்பால் சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பில் இருந்த துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது குடும்பம். எனினும் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், அவருடைய அண்ணன் சிவராஜ்குமார் குடும்பத்திற்கு எல்லாமுமாக இருந்து அவர்களை தேற்றியதுடன் தற்போது படத்தில்…