அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்!

0
239

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ”சார காற்றே” என்ற இந்த பாடலை பிரபல பாடகர்கள் சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளனர்.

அண்ணாத்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மறைந்த பாடகர் எஸ்பிபி பாடிய பாடல் என்பதால், இந்த பாடலை ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு காத்திருந்து, கேட்டு ரசித்தனர். இந்நிலையில் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பதால், படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு பற்றி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்..


இத்தகைய சூழ்நிலையில் அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். டி இமான் இசையமைக்கு அண்ணாத்த படத்தின் இந்த பாடல் ” சாற காற்றே ” என அறிவித்துள்ளனர். இந்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும்.