29
Jun
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம்…