இந்திய திரை உலகின் முடி சூடா மன்னன் அமிதாப் நடிக்கும் தமிழ் படம்!

இந்திய திரை உலகின் பிதாமகன் அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார்.

எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து , தமிழ் வாணன் இயக்கத்தில் திருச்செந்தூர் முருகன் productions என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக் கும் , மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு “உயர்ந்த மனிதன்”  என்று தலைப்பிடப்பட்டு உள்ளது.

இந்த படம் தமிழ் , ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க பட உள்ளது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு , வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற “கள்வனின் காதலி” படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார். அமிதாப் பச்சன் முதல் முறையாக தமிழில் நடிக்கும் இந்த தகவலை வீடியோவில் தோன்றி அறிவிப்பாக வெளியிட்டார் ரஜினிகாந்த்.

“எனது கனவு நிறைவேறியது.இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். உலகெங் கும் புகழ் பெற்று , இந்திய திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம்.  தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை” என்கிறார் இயக்குனர் தமிழ்வாணன்.

“ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்” என்கிறார் எஸ் ஜே சூர்யா.

மார்ச் 2019 இல் படப்பிடிப்பு துவங்க உள்ளது.மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.