இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ !!

0
255

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த தொடருக்கு ‘லேபிள்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளான ‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், மாறுபட்ட களத்தில் ‘லேபிள்’வெப் சீரிஸை இயக்குகிறார், இந்த தொடரின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது.

‘லேபிள்’ வெப் சீரிஸின் கதையை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் CS இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் B. ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தின் எடிட்டராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் என நான்கு பாடலாசிரியர்கள் இத்தொடருக்கான பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பு பணிகளை அசார் செய்கிறார், சண்டைப்பயிற்சியாளராக சக்தி சரவணன் பணியாற்றுகிறார்.

ஜெய் மற்றும் தன்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள்.

‘லேபிள்’ வெப் சீரிஸை பற்றிஇயக்குநர் அருண்ராஜா காமராஜ் கூறுகையில், ” ஒருவன் எந்த பகுதியை சேர்ந்தவன் என்பதை பொறுத்தே, அவனது குணாதிசயம் இருக்கும் என்கிற பொதுப்படை எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது. இதுவே அவர்களை தவறான வழியை நோக்கி செல்ல காரணமாகவும் அமைகிறது. இப்படி தனது வாழ்விடம் சார்ந்தே தனது வாழ்க்கை அமையும் என்பதை ஒருசிலரால் மட்டுமே மாற்றியமைக்கவும் முடிகிறது. ஆனால் இந்த சமூகம் தனது பொதுப்படையான பார்வையை மாற்றியமைக்குமேயானால் , ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க முடியும் …” என்றார்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.