பல தடைகளை தாண்டி மே 11ல் வெளி வருகிறது ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

 
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக  அமலாபால் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர்  அஃப்தாப் ஷிவ்தசானி  நடித்துள்ளார். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’   நிறுவனம் தயாரித்துள்ளது.’பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மே 11  முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.   இதையொட்டி  சென்னையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி ,சித்ரா லட்சுமணன் ,தயாரிப்பாளர் முருகன் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணன்  பேசியவை
‘ திருச்சி பரதன் பிலிம்ஸ்  உரிமையாளர் திரு விஸ்வநாதன் அவர்கள் ஒரு முதுகெலும்பாக இந்த படத்திற்கு உறுதுணையாக நின்றார். அதனால்தான் ,இவ்வளவு தடைகளையும் தாண்டி தற்போது மே 11 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.நடிகர் அரவிந்த் சாமி மாதிரி நடிகர்கள் இருந்தால் போதும் தயாரிப்பாளர் முருகன் போன்றோர்களுக்கு மிக பெரிய பலமாக இருக்கும்.அரவிந்த் சாமி அவர்களுக்கும்,திரு விஸ்வநாதன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணா பேசியவை
” அரவிந்த்சாமி அவர்கள் எங்களுக்காகவும் இந்த படத்திற்காகவும் நிறைய விட்டு கொடுத்து இருக்கிறார்.முன்பணம் வாங்கவில்லை.உண்மையிலேயே அவரை பாராட்ட வேண்டும்.படம் பல தடைகளை தாண்டி வெளிவருகிறது. படத்தில் உள்ள அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார் கள்.கண்டிப்பா இந்த படம் மாபெரும் வெற்றியடையும்.”
பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன்  அரவிந்த்சாமி பேசியவை
‘ அனைவரும் பேசியதுபோல படம் பல தடைகளை தாண்டி வெளியாக இருக்கிறது.படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த முருகன் அவர்களுக்கு நன்றி,படத்தில் ரமேஷ் கண்ணா வசனம் அருமையாக எழுதியுள்ளார்.சூரி,ரோபோசங்கர்,ரமேஷ் கண்ணா அருமை யான நகைச்சுவை காட்சிகளை கொடுத்துளள்னர்.நைனிகா ,ராகவன் இரண்டு பேருமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளனர்.அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்துள்ளார்.அம்ரேஷ் இசை,சித்திக் இயக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது.விஜயன் அவர்களுடைய 500  படம் இது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.இப்படம் மே 11 ரிலீஸ் ஆகிறது,கண்டிப்பாக வெற்றியடையும்”
மேலும் “ இந்தப்படம் தமிழகமெங்கும் வெளியாக காரணமாக இருக்கும் பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.நடிகர் அரவிந்த்சாமி மிகப்பெரிய உதவியாக இருந்தார்.இயக்குனர் சித்திக் அவர்க ளுக்கும் ,படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.பல தடைகளை தண்டி மே 11 ரிலீஸ் ஆகிறது.. சீனியாரிட்டி அடிப்படையில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்திற்கு ஏப்-27ஆம் தேதி ரிலீஸ் தேதி எடுத்துக்கொள்ள சொன்னார்கள். ஆனால் அவெஞ்செர்ஸ், உள்ளிட்ட சில திரைப்படங்கள் ரிலீசாவதால் நாங்கள் எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. அதனால் தான் மே-11ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தோம்..” என்று தயாரிப்பாளர் முருகன் தெரிவித்து நன்றியுரை ஆற்றினார்.
அத்துடன்  அரவிந்தசாமி  செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.
“பாஸ்கர் ஒரு ராஸ்கலின் தயாரிப்பாளர் முருகன் மனம் கசிகிறாரே?”

“இப்பல்லாம் படம் எடுக்கிறத விட ரிலீஸ் பண்றதுதான் கஷ்டம்!பெரிய காரியம்.! இருக்கிற சொத்தை  எல்லாம் மொத்தமா   போட்டுத்தான் பணம் எடுக்கிறாங்க. நான்  செஞ்சதை பெரிசா நினைக்கல! நான் டைமுக்கு வந்து திறமையா நடிச்சுக்கொடுத்தேன். நடிச்சதுக்கு எவ்வளவு  சம்பளமோ அதைத்தான் வாங்கினேன்.மீறி எந்த செலவும் வைப்பதில்ல.எல்லோரும் இதைப் பின்பற்றினால் நல்லா இருக்கும்.”

“பொதுவா பணம் பாக்கி இருந்தால் டப்பிங் கூட சிலர் பேசமாட்டாங்க. அரவிந்தசாமின்னா பாக்கி வைக்கலாம்கிற மனப்பான்மை வளர்ந்திட்டா என்ன பண்ணுவீங்க?”

“அவங்க நிலைமையையும் பார்த்துத்தானே முடிவு செய்ய முடியும்.! 14 வருச இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்தவன். வாய்ப்பு கிடைச்சிருக்கு நடிக்கிறேன்.காரணம்  ரசிகர்களின் வரவேற்பு .இதில் எனக்கு சோலோ ஹீரோ வேணும்னோ,மத்த ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன்னோ சொல்ல மாட்டேன். எனக்கு நல்ல வேஷம் கிடைச்சா போதும்.!”

“ரஜினியை வைத்து  கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் வில்லன் வேடம் கிடைத்தால் நடிப்பீர்களா?!”

“கேரக்டர் பொருத்தமாக இருக்கணுமே?.. என்னைப்பொறுத்தவரை ஹீரோவாகத்தான் நடிப்பேன், வில்லனாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் ஒருபோதும் சொல்வதில்லை. தனி ஒருவன் படத்தில் நடிக்கும்போது நானே தனி ஒருவன் என நினைத்துக்கொண்டேன்.. போகன் படத்தில் நானே போகன் என நினைத்துக்கொண்டேன்.. அதனால் கதையும் அதில் எனது கேரக்டரும் பிடித்திருந்தால் போதும்”

“பேசுவதில் மிகவும் அமைதியாக காணப்படுகிற நீங்கள் ட்விட்டரில் பொங்குகிறீர்களே ?”

“அப்போதும் அமைதியாகத்தான் இருப்பேன். காமன்மேனாக   இருந்து பிரதிபலிக்கவேண்டிய கடமை இருக்கிறதே? இதனிடையே திரையுலக போராட்டத்திற்கு நான் எதிரானவன் என்று சிலர் புரளியை கிளப்பிட்டாங்க . நான் ட்விட்டரில் பதிவிட்டதும் அந்த அர்த்தத்தில் அல்ல. சினிமாவை நம்பி நிறைய தினக்கூலி தொழிலாளர்கள் இருப்பதால் சீக்கிரமே வேலைநிறுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என கூறினேன்.. அவ்வளவுதானே தவிர, இதில் உள்நோக்கமோ, எதிர்மறை கருத்தோ எதுவும் இல்லை.”

“கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?”

“கடவுள் நம்பிக்கை இருக்கிறதான்னு சொல்ல முடியல. இல்லன்னு சொல்லவும் முடியல. கோவிலுக்குப் போவேன். சாமி கிட்ட கை கட்டி நிப்பேன். எப்படி பிரே பண்றது என்ன கேட்கிறதுன்னு தெரியாது.” என்கிறார்  அரவிந்த சாமி.

தொழில் நுட்பக்குழு :
 
இயக்கம்                                 : சித்திக்
இசை                                        : அம்ரேஷ்
ஒளிப்பதிவு                            : விஜய் உலகநாதன்
எடிட்டிங்                                  : கே.ஆர்.கௌரி சங்கர்
புரொடக்ஷன் டிசைன்        : மணி சுசித்ரா
ஆர்ட்                                        : ஜோசப் நெல்லிகன்
சண்டை பயிற்சி                   : பெப்சி விஜயன்
நடனம்                                     : பிருந்தா
நிர்வாக தயாரிப்பு                  : விமல்.ஜி
தயாரிப்பு                                  : எம்.ஹர்சினி