16 வயதினிலே ரிலீஸான நாளின்று!

16 வயதினிலே ரிலீஸான நாளின்று!

தமிழ் சினிமாவை மண் மணம் வீசும் கிராமத்து வாழ்வியலுக்கு எடுத்து சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் சகாப்தம் தொடங்கிய 16 வயதினிலே திரைப்படம் இன்றுடன் வெளியாகி 47 ஆண்டுகள் ஆகுது. கோலிவுட்டில் முதன் முதலில் என்ற வார்த்தையை பல்வேறு விஷயங்களில் செஞ்சு காட்டிய படம்தான் 16 வயதினிலே. அந்தக் காலத்துலே நம் தமிழ் சினிமாக்கள் அம்புட்டு, ஷூட்டிங்கும் அரங்குகளிலேயே எடுக்கப்பட்டு வந்துச்சு. அப்பாலே அந்த அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முறையாக முழுப்படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்றால், அது 16 வயதினிலேதான்.இது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரமிப்பா பேசப்பட்டுச்சு. ‘இதெப்படி இருக்கு?’ என்று காட்சிக்குக் காட்சி இவர் சொல்லும் வசனம்... பஞ்ச் வசனம்... ரஜினி பஞ்ச் வசனம் பேசிய வகையிலும் முதல்படம். ஸ்ரீதேவி அப்படியொரு அழகு தேவதையாக நாயகியானதும் இதுவே முதல் படம். எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகையாக இருந்தாலும் காந்திமதிக்கு அப்படியொரு நடிகையாகக் கிடைத்த…
Read More
ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்!-ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்!-ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்.. இச்சூழலில் நம் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு ப்ரண்ட்சுக்கு ஸ்பெஷல் ரிப்போர்ட் கொடுக்கலின்னா தெய்வகுத்தமாயிடுமாமில்லே.. இதோ நம் கட்டிங் கண்ணையாவி சிறப்பு கட்டுரை கிராமத்து படங்கள் என்று சொன்னாலே நாட்டாமை பெயர் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தனது படங்களில் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் கே எஸ் ரவிக்குமார் அதிகமாகவே மெனக்கெடுவார்.இயக்குநராக மட்டும் இல்லாமல் தான் இயக்கும் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் வியக்க வைப்பார். நடிப்பிலும் வெளுத்து வாங்குவார் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்கிய படையப்பா திரைப்படம் வெளிவந்தது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளைக் கடந்து உள்ளது. இன்றும் இந்த படத்தின் வெற்றியை #Padayappa24 என்ற ஹேஷ்டாக் உடன் சமூக வலைதளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனதும்…
Read More
இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

  “நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான…
Read More
ரஜினிக்கு, சிவராஜ்குமார் வில்லனாவதை எதிர்க்கும் கன்னடத்தினர்

ரஜினிக்கு, சிவராஜ்குமார் வில்லனாவதை எதிர்க்கும் கன்னடத்தினர்

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தலைவரின் 169 படத்தை இயக்குவார் என்ற செய்தி தற்போது ஒருவழியாக உறுதியாகி போச்சு. அனிருத் இசையமைக்க, இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இவர்களுடன் ரம்யா கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அந்த படத்திற்கு தமிழ் அல்லாது வேறு ஒரு மொழியில் இருக்கும் நாயகர்களை போட்டால் படம் இன்னும் நன்றாக வரும் என்ற எதிர்பார்ப்பில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை அணுகினர். அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஏற்கனவே மாரடைப்பால் சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பில் இருந்த துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது குடும்பம். எனினும் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், அவருடைய அண்ணன் சிவராஜ்குமார் குடும்பத்திற்கு எல்லாமுமாக இருந்து அவர்களை தேற்றியதுடன் தற்போது படத்தில்…
Read More
ரஜினிகாந்துக்கு முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி காலமானார்!

ரஜினிகாந்துக்கு முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி காலமானார்!

'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி அறிமுகமானபோதே, அவருக்கு, 'கவர்ச்சி வில்லன் ரஜினி ரசிகர் மன்றம்' தொடங்கிய மதுரை முத்துமணி காலமானார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் சீன் கேனரி முதல் நடிகர் முரளி, ஸ்ரீகாந்த் போன்ற தமிழ் நடிகர்கள் வரையில் பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டது. இன்று அது மிகப்பெரிய ஆலமரமாகி விட்டாலும், முதல் மன்றத்தைத் தொடங்கிய முத்துமணி மீது ரஜினிக்கு எப்போதுமே தனிப் ப்ரியம் உண்டு. மன்றத்தைத் தொடங்கிய முத்துமணியிடம் முன்பொரு முறை பேசிய போது. “மதுரை அலங்கார் தியேட்டர்ல 1975ல ‘அபூர்வராகங்கள்’ படம் ரிலீஸ் ஆச்சு. அதில் ரஜினி மொத்தமே 20 நிமிசங்கதான் வருவார். அதுவும் ப்ளட் கேன்சர் பேஷண்டா, சாவோடு போராடும் ரோல்ம். ஆனால் அவர் கேட்டைத் திறந்துகிட்டு அறிமுகமாகும் அந்த ஸ்டைலும், அவரது பார்வையும் அப்பவே என்னை என்னவோ…
Read More
ரசிர்களை சோதிக்கிறதா  “அண்ணாத்த”  ? -திரை விமர்சனம் !

ரசிர்களை சோதிக்கிறதா  “அண்ணாத்த”  ? -திரை விமர்சனம் !

இயக்கம்: சிவா நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜகபதிபாபு, இசை: டி. இமான் கதை - கிராமத்து ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். உயிருக்குயிரான தங்கை கீர்த்தி சுரேஷ். அவருக்கு ஊரெல்லாம் தேடி மாப்பிள்ளை பார்க்க்கிறார் ரஜினி.  அப்போதுதங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் வரும்பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. தமிழ் சினிமாவில் பாசமலர் காலத்திலிருந்து  அடித்து துவைத்த அண்ணன் - தங்கை சென்டிமென்ட் கதைக்கு கொஞ்சம் புதுப்பெயிண்ட் அடித்து ரஜினி மசாலாவை பூசித் தந்திருக்கிறார்கள் ஆனால் காலம் மாறி பல காலமாகிவிட்டதை மறந்து விட்டார்கள். ஊர் பஞ்சாயத்து தலைவராக மக்கள் மவுசுடன் துள்ளலாக திரிகிறார் ரஜினி. படித்துவிட்டு ஊருக்கு வரும் கீர்த்திக்கு மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு கட்டத்தில் தான் பேசியே திருத்திய பிரகாஷ் ராஜ் பையனுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார். ஆனால் கல்யாணத்திற்கு முதல் நாள் கீர்த்தியை காணவில்லை. தங்கையை மீது பாசமான அண்ணன் அவருக்கே…
Read More
ரஜினிக்கு உண்மையில் என்ன ஆனது ?

ரஜினிக்கு உண்மையில் என்ன ஆனது ?

    தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் பிரமாண்டமாக வெளியாவதில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் தீடிரென ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஜினியின் உடல் நலனுக்கு என்னவானது ரசிகர்கள் கவலையுடன் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப் பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை, மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ்(necrosis) எனப்படும் இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுப்பட்டுள்ளதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை…
Read More
அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்!

அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்!

  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ”சார காற்றே” என்ற இந்த பாடலை பிரபல பாடகர்கள் சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளனர். அண்ணாத்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மறைந்த பாடகர் எஸ்பிபி பாடிய பாடல் என்பதால், இந்த பாடலை ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு காத்திருந்து, கேட்டு ரசித்தனர். இந்நிலையில் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பதால், படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு பற்றி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.. இத்தகைய சூழ்நிலையில் அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். டி இமான் இசையமைக்கு அண்ணாத்த படத்தின் இந்த…
Read More
என் வாழ்க்கையில் ஒரேயொரு கனவு என்ன தெரியுமா? – காலா விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்

என் வாழ்க்கையில் ஒரேயொரு கனவு என்ன தெரியுமா? – காலா விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்

தனுஷ்-ஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் மைதானம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் ரஜினிகாந்தை வாழ்த்தி ரசிகர்கள் கோஷமிட்டப்படி இருந்தனர். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழா மேடை, முழுவதும் கருப்பு நிறத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ரஜினி உட்பட படக்குழுவினர் ஒருசிலரைத் தவிர அனைவரும் கருப்பு நிற உடையில் வந்திருந்ததால், மேடை முழுவதும் கருப்பு மயமாகக் காட்சி அளித்தது. நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக நடன இயக்குநர் சாண்டி, ரஜினி டயலாக்குகள் மற்றும் பாடல்கள் அடங்கிய தொகுப்புக்கு நடனமாடினார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சுமார் 15 நிமிடம் தனது…
Read More
“சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியுமா? – 2.0 இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!

“சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியுமா? – 2.0 இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!

ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று இது நாள் வரை பலராலும் நம்பப்பட்டு வந்த் ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் 2 மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய்…
Read More