நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்திருப்பதைக் கண்டு வியப்படையாதவர்களேயில்லை எனலாம்.
சீயான் படம் என்றாலே மாஸ் தான். அதிலும் அவரின் டிஃபரென்ட் கெட்டப்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விக்ரமின் எடுப்பான போலீஸ் கெட்டப்புக்கு துடிப்பான பின்னணி இசையமைத்து சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே தன் புதுமையான முயற்சியை கையாண்டிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், 26 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலரையும் தன் ஸ்டைலில் மிரட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.
விக்ரம் = ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் இருக்கும் என்றும், அதற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது - துரை சுதாகர்!July 10, 2019
ஜாக்கிசான் நடித்துள்ள 'தி பாரினர்' தமிழில் நவம்பர் 3 முதல்!November 1, 2017
மே 1ம் தேதி ரிலீஸாகும் அஜித்-தின் விவேகம் டீசரில் என்ன ஸ்பெஷல்?April 21, 2017
பத்திரிகையாளர் ஏக்நாத்தின் பாடல் ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பரிந்துரை!March 16, 2017
அருண் விஜய் நடித்து வந்த #AV31 படப்பிடிப்பு நிறைவடைந்தது!January 10, 2021