சாமி 2வில் தேவிஸ்ரீபிரசாத் மிரட்டப் போறாரு!

சாமி 2வில் தேவிஸ்ரீபிரசாத் மிரட்டப் போறாரு!

நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு  திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்திருப்பதைக் கண்டு வியப்படையாதவர்களேயில்லை எனலாம். சீயான் படம்…
Read More
விஜய் ஆண்டனியோட ‘அண்ணாதுரை’ பட பாடல்களை இலவசமா டவுண்லோட் செய்ய அனுமதி!

விஜய் ஆண்டனியோட ‘அண்ணாதுரை’ பட பாடல்களை இலவசமா டவுண்லோட் செய்ய அனுமதி!

புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான 'அண்ணாதுரை' யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா இன்று  -நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது. 'அண்ணாதுரை' படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான 'www.vijayantony.com ' மில் இப்பட பாடல்களை மக்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம். இந்த யுக்தியை தமிழ் சினிமா வரவேற்று உள்ளது. இது பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என…
Read More
’99 சாங்க்ஸ்’ படத்தின் நிலை என்ன? – ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

’99 சாங்க்ஸ்’ படத்தின் நிலை என்ன? – ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் '99 சாங்க்ஸ்' இப்படத்தை தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் தயாரிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் தற்போதைய நிலை குறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பார்ந்த இசை ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளே, உங்களில் பலர் '99 சாங்க்ஸ்' படத்தின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள். சரியான நாயகன் மற்றும் நாயகியைக் அடையாளம் காண, கடந்த சில வருடங்களாக தேவையான நேரமெடுத்து கிட்டத்தட்ட 1000 பேரை நாங்கள் பரிசீலித்துள்ளோம். திரையில் புத்துணர்ச்சியையும், திறமையையும் பிரதிபலிக்கும் அந்தச் சரியான, விசேஷமான நடிகர்களை நாங்கள் தேடிப்பிடித்துவிட்டோம். முதன்மை நடிகர்கள், கடந்த ஒரு வருடமாக கே.எம்.மியூஸிக் கன்சர்வேடரியில்,அவர்கள் கதாபாத்திரத்துக்கு தேவையான இசை வாத்தியங்களை வாசிக்க பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் ஹாலிவுட்டில் நடிப்புக்கான பிரத்யேக பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொண்டுள்ளனர். இந்த வருடம் இந்தியாவில் படப்பிடிப்பு…
Read More