சூரியின் சகோதரர் இல்லத் திருமணத்தில் 10 பவுன் நகை திருட்டு

🎬 சூரியின் சகோதரர் இல்லத் திருமணத்தில் 10 பவுன் நகை திருடியதா பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் அப்ப்டீங்கறவன் அரெஸ்ட் செய்யப்பட்டிருக்கான் . இந்த ஆசாமி சுய விளம்பரத்திற்காக வி ஐ பி வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து இப்படி திருடி வருபவனாம்..

அதாவது ராமநாதபுரம் டிஸ்ட்ரிக் பரமக்குடியைச் சேர்ந்த மணிவாசகம் பரமக்குடி பஜார் பகுதியில் ஜூவல்லரி ஷாப் நடத்தி வாரார். இவரோட மவன் விக்னேஷ். டிகிரி படிச்ச இளைஞரான இவன் ஒரு விளம்பர பித்டு பிடிச்சவனாம். சுய விளம்பரத்திற்காக மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள சினிமா பிரபலங்கள், முக்கிய நபர்களிடம் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்தி வச்சிக்கறது வாடிக்கை. குறிப்பாக சினிமா ஸ்டார்களுடன் நெருங்கிப் பழகி போட்டோ எடுத்து தனோட சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்வது வாடிக்கையாம்.

அத்தோடு வி ஐ பி-ங்க வீடுகளில் நடக்கும் விஷேசங்களில் இந்த விக்னேஷ் அழைப்பில்லாமலே கலந்து அவ் விழாக்களில் நகை, பணம் என எதாவது ஒன்றை திருடி மாட்டி கொள்வதும் வாடிக்கையாம். கொஞ்ச மாசங்களுக்கு முன்னாடி மதுரையில் நடந்த போலீஸ் ஆபீசர் மகள் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விக்னேஷ் அவரோட மகள் கழுத்தில் இருந்த வைர நெக்லஸை திருடிச் சென்று பின்னர் மாட்டி சிறையில் அடைக்கப்பட்டான்.

கூடவே தான் சம்பந்தப்பட்ட திருட்டு செய்திகள் வெளியாகும் டெய்லீஸ், ஆன் லைன் செய்திகளை கலெக்ட் செஞ்சு அதனையும் தன் பேஜில் போடும் பழக்கமுண்டாம்.

இந்த விக்னேஷ் மீது மதுரை, சென்னை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. ஆனால் அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்காம தனது புல்லட்டில் பந்தாவாக அவரது சொந்த ஊரான பரமக்குடியில் வலம் வருவான்.

இந்நிலையில்தான் மருதையிலே பரோட்டா சூரியோட அண்ணன் மகள் திருமண விழாவில் 10 சவரன் நகை திருட்டு போச்சு.இது குறித்து விசாரிச்ச மதுரை போலீஸ் திருமண நிகழ்ச்சியை பதிவு செய்த வீடியோ காட்சிகளை ஆய்வு செஞ்சப்போ.அதுலே விக்னேஷ் கலந்துக்கிட்டது சந்தேகத்தை ஏற்படுத்திச்சு.இதுகுறித்து விசாரிக்க மதுரை போலீஸ் பரமக்குடியில் உள்ள விக்னேஷின் வீட்டிக்கு முந்தா நேத்து திங்கள்கிழமை நைட் போனாய்ங்க. அங்கே போ போலீஸ் விக்னேஷ் குறித்து கேட்டதற்கு அவன் வீட்டில் இல்லையே அப்படீன்னு அப்பா & அம்மா சொன்னதை நம்பாம. வீட்டிற்குள் புகுந்த போலீஸ் அங்கு அரிசி மூட்டைக்கு பின்னாடி ஒளிஞ்சிருந்தத விக்னேஷை கையோடு தூக்குன உடனே பரோட்டா வூட்டுலே நகையைத் திருடியதை ஒப்புகிட்டான்.

நன்கு வசதியான குடும்பத்தில் வசதியாக வாழ்ந்து வரும் விக்னேஷ் பொழுதுபோக்கிற்காகவும், தனது சுய விளம்பரத்திற்காகவும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது பரமக்குடியையும் தாண்டி பேசு பொருளா ஆகி போச்சு