மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நினைவு நாள்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நினைவு நாள்!

முன்னொரு காலத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினார்கள். மனதை லேசாக்கும் இசை, லேசாகவும் எளிமையாகவும் கிடைக்க, அதில் கிறுகிறுத்துப் போனான் ரசிகன். ரசிக மனங்களுக்கும் சினிமா இசைக்கும் ஓர் உறவு அங்கே பூத்தது. அப்படி உறவைப் பூக்கச் செய்தவரையே உறவாய்க் கொள்ளத் தொடங்கினார்கள் மக்கள். அவர்... எம்.எஸ்.வி. என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன். இசைக்கு தலையாட்டலாம். ஆனால் அந்த உணர்வை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ளமுடியாது என்பதாகவே திரையிசையும் அந்தக் காலத்தில் இருந்தது. எப்பேர்ப்பட்ட பாட்டாக இருந்தாலும் அதில், கர்நாடக சங்கீதத்தின் சாரமும் தாக்கமும் நிறைந்திருக்க, பாட்டைக் கேட்டு ரசித்தார்களே தவிர, அதை ராகம் பிசகாமல் சேர்ந்து பாடமுடியாத நிலைதான் இருந்தது. பிறகு அதை உடைத்து, எல்லோருக்குமான இசையாக மாறியதுதான் தமிழ் சினிமா இசையின் ஆரம்பம்.…
Read More
மெல்லிசை  மாமணி & மெலடி கிங் வி.குமார்

மெல்லிசை மாமணி & மெலடி கிங் வி.குமார்

கடந்த 1996இல் காலமான இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் இசை நிகழ்ச்சிகளில் ரசித்திருப்பார்கள். ரசிக்கும்போழுது அந்தப் பாடல்கள் வேறு ஒரு இசையமைப்பாளருடயது என்ற நினைவுடனேயே ரசித்திருப்பார்கள்., இதற்கு நானும் விதி விலக்கல்ல.. பிறகு நான் நினைத்த இசையமைப்பாளரின் இசையில் அமைந்த பாடல் இது இல்லை, இது வேறு ஒருவர் என்று அறியும் போது ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்.பெரும்பாலும் இவ்வாறு நான் MSV , இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்த பல பாடல்களுக்கு இசை அமைத்திருந்தவர் வி. குமார். மெல்லிசை மன்னர்கள் பிரிந்து அவர்களில் எம்.எஸ்.வி. உச்சத்தில் கோலோச்சிய காலத்தில் அறிமுகமான ஏனைய இசையமைப்பாளர்களில் வி.குமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் மெலடிப்பாடல்கள் எம்.எஸ்.வியின் பாணியிலிருந்து வித்தியாசமாக இருந்தன. உன்னிடம் மயங்குகின்றேன், என்ற ஜேசுதாசின் மகுடத்தில் வைரமாக ஜொலிக்கும் பாடலை உருவாக்கியவர் இவர்தான். ஆனால் வி.குமார் தமிழ்ச் சமூகத்தால் பெரிதும் கொண்டாடப்படாதவர். இவரது பெற்றோர்…
Read More
இந்தி இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி. எஸ்.!

இந்தி இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி. எஸ்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். 'தி நைட் மேனேஜர்' எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் 'தி நைட் மேனேஜர்'. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 'பொன்னியின் செல்வன்' புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடருக்கு தமிழ் திரையுலகினைச் சேர்ந்த முன்னணி…
Read More
சாமி 2வில் தேவிஸ்ரீபிரசாத் மிரட்டப் போறாரு!

சாமி 2வில் தேவிஸ்ரீபிரசாத் மிரட்டப் போறாரு!

நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு  திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்திருப்பதைக் கண்டு வியப்படையாதவர்களேயில்லை எனலாம். சீயான் படம்…
Read More
“சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியுமா? – 2.0 இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!

“சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியுமா? – 2.0 இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!

ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று இது நாள் வரை பலராலும் நம்பப்பட்டு வந்த் ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் 2 மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய்…
Read More
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்!

2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்!

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்காக 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7நட்சத்திர ஹோட்டலான Burj- Al – Arab செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ் வைத் தொடர்ந்து 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27ம் தேதி…
Read More
ஆறு வருடங்களில் 15 படங்கள் மட்டுமே இசை அமைச்சது ஏன்? – சத்யா பதில்!

ஆறு வருடங்களில் 15 படங்கள் மட்டுமே இசை அமைச்சது ஏன்? – சத்யா பதில்!

எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசைபயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலைபொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா. இதுவரை 15 படங்களுக்கு மேல்இசையமைத்துள்ளார். எண்ணிக்கை என்ன ரொம்ப கம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்துவேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர்தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டேஇருக்கிறது. உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்த படங்களை புக் செஞ்சிட்டு பணம்சம்பாதிக்க வேண்டியதுதானே?  என்ற கேள்விக்கும் அற்புதமான பதிலை தருகிறார் சத்யா. நீங்க சொல்றதும் சரிதான் சார், கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு, படத்துலகமிட் ஆகுறது விஷயமில்ல, ஆனால் சரியான நேரத்துல பாடல்களும், பின்னணி இசையும் என்னால தரமுடியுமான்னு ஒரு யோசனை வந்துட்டே இருந்தது. இதனால் பல படங்களை நான் தவிர்த்துவிட்டேன். ஆனா இனி என்னுடைய வேலையை இன்னும் வேகமாக்கியுள்ளேன். இதனால் பெரிய ஹிரோக்களின்படங்களுக்கு சரியான நேரத்தில் என்னால் அவுட்புட் தர முடியும் என்று நம்பிக்கையோடு  கூறுகிறார் சத்யா. தற்போது விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடித்துக் கொண்டிருக்கும் ”பக்கா” படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெரும்பாலான பகுதி திருவிழா செட்டப் இருப்பது போலவேஇருக்கும். இதுவரைக்கும் பல கரகாட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீங்க. ஆனால் பக்காபடத்தில் ஒரு கரகாட்ட பாடல் இருக்கு அது முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தை தரும் என்றுநம்பிக்கையுடன் கூறுகிறார் சத்யா. இத்துடன் அசுரகுலம், பயமா இருக்கு ஆகிய படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்குதயாராகிவிட்டது என்கிறார் மகிழ்ச்சியுடன். "பயமா இருக்கு" படத்தில் வரும் மயிலு பாடல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதுமட்டுமின்றி முதல் முறையாக அந்தோனிதாஸ் காதல் பாடலை பாடியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Read More
விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தின் எடிட்டரும் அவரே!

விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தின் எடிட்டரும் அவரே!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்ததாக பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.  இவர்  நடிப்பில் வெளியாகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்று வரும் நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் `காளி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு (Editing) பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனி ஒரு எடிட்டராகவும் வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’ படத்தில் விஜய் ஆண்டனி ஆசிரியர், குடிகாரர் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் மற்றும்…
Read More