தேசிய திரைப்பட விருது பெற்ற அல்லு அர்ஜுன் ! ‘புஷ்பா – தி ரைஸ்’ படத்திற்காக விருதை பெற்றார் !

தேசிய திரைப்பட விருது பெற்ற அல்லு அர்ஜுன் ! ‘புஷ்பா – தி ரைஸ்’ படத்திற்காக விருதை பெற்றார் !

'புஷ்பா - தி ரைஸ்' திரைப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் 69வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளார். ஆகஸ்ட் மாத இறுதியில் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று புது தில்லி, விஞ்ஞான் பவனில் பிரம்மாண்டமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம், அல்லு அர்ஜுன் தனது நடிப்பு பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். நாட்டின் இந்த மதிப்புமிக்க கவுரவத்தைப் பெறும் முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜூன் பெற்றுள்ளார். ஷெர்வானி ஜாக்கெட் அணிந்து, மிகவும் நேர்த்தியுடன் இந்த விருது விழாவிற்கு வந்தார் அல்லு அர்ஜூன். இந்த விழாவில் அவர் தனது மனைவி அல்லு சினேகா ரெட்டியுடன் கலந்து கொண்டார். 2021 இல் வெளியான ‘புஷ்பா - தி ரைஸ்’ பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது மற்றும் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் இதுவும்…
Read More
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும் சமீபத்தில் ‘பத்து தல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் ’கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரத்திலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று படத்தின் புரோமோ டீசரை வெளியிடுவதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மேலும் நான்கு மொழிகளில் விரைவில் டீசர் வெளியாகவுள்ளது.…
Read More
‘தாமிரபரணி’ படக்கூட்டணி இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது!

‘தாமிரபரணி’ படக்கூட்டணி இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது!

  ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இது விஷாலின் 34வது படமாகும். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் படக் குழுவினர் இதில் பங்கேற்றனர். தேவி ஶ்ரீ பிரசாத் அதிரடி இசையில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படம் சென்னை, தமிழ்நாட்டின் தென் பகுதிகள், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது. ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் உடன் இணைந்து இத்திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய விறுவிறுப்பான…
Read More
டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!!

டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!!

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகை அனு கீர்த்தி கூறியதாவது... டிஎஸ்பி தான் எனது முதல் படம், இந்த படத்தில் எனக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. விஜய் சேதுபதி சார் போன்ற ஒரு நடிகருடன் திரையை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. எனக்கு நிறைய கற்று கொடுத்தார். இமான் சார் இசையில் நான் நடித்திருப்பது பெரிய சந்தோஷம். படத்தின் தொழில்நுட்ப குழுவின் கடின உழைப்பினால் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் டிசம்பர் 2 வெளியாகவுள்ளது, படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். இயக்குநர் மிஷ்கின் பேசியதவாது... விஜய் சேதுபதி எப்பொழுதும் ஆச்சர்யத்தை தரக்கூடிய…
Read More
விரைவில் நடிகர்  அவதாரம் எடுக்கும் – தேவி ஸ்ரீ பிரசாத் !

விரைவில் நடிகர் அவதாரம் எடுக்கும் – தேவி ஸ்ரீ பிரசாத் !

'புஷ்பா - தி ரைஸ்' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பலராலும் வெகுவாக பாராட்டப்படுவது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாதை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது . முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கிய இப்படம் சமீபத்தில் பல மொழிகளில் வெளியானது. இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரத்யேக நேர்காணலில் மனம் திறந்த தேவி ஸ்ரீ பிரசாத், படத்தின் இசை மற்றும் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பற்றி பேசினார். நேர்காணலின் முக்கிய அம்சங்கள் உங்களுக்காக: ஐந்து மொழிகளிலும் புஷ்பாவின் பாடல்கள் வெற்றிபெற்றுள்ளன. எப்படி உணர்கிறீர்கள்? உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு பாடலையும் முடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. குறிப்பிட்ட மொழிக்கு ஏற்ற பாடகர்களை கவனமாக தேர்வு செய்தேன்.…
Read More
சாமி 2வில் தேவிஸ்ரீபிரசாத் மிரட்டப் போறாரு!

சாமி 2வில் தேவிஸ்ரீபிரசாத் மிரட்டப் போறாரு!

நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு  திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்திருப்பதைக் கண்டு வியப்படையாதவர்களேயில்லை எனலாம். சீயான் படம்…
Read More