தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் படமான ‘ஜாங்கோ’ தயார்!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் படமான ‘ஜாங்கோ’ தயார்!

எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் தான் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார். அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டியில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் மனோ கார்த்திகேயன். இதை தவிர்த்து சில குறும்படங்களையும் ஆவண படங்களையும் மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம் தான் ஜாங்கோ என்று மனோ கார்த்திகேயன் கூறுகிறார். "தமிழ் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான முதல்…
Read More
ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘வேட்டை நாய்” பட இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘வேட்டை நாய்” பட இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டை நாய்’ ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயனும், நடனத்தை காதல் கந்தாஸ் மாஸ்டரும் வடிவமைத்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் சந்திரபபிரகாஷ் ஜெயின், அழகன் தமிழ்மணி, விடியல் ராஜு இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார் பவித்ரன் நடிகர்கள் ஏ.எல்.உதயா, போஸ் வெங்கட் ,சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ரவிவர்மா, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாகுவார் தங்கம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர்…
Read More
சாமி 2வில் தேவிஸ்ரீபிரசாத் மிரட்டப் போறாரு!

சாமி 2வில் தேவிஸ்ரீபிரசாத் மிரட்டப் போறாரு!

நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு  திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்திருப்பதைக் கண்டு வியப்படையாதவர்களேயில்லை எனலாம். சீயான் படம்…
Read More
என் வாழ்க்கையில் ஒரேயொரு கனவு என்ன தெரியுமா? – காலா விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்

என் வாழ்க்கையில் ஒரேயொரு கனவு என்ன தெரியுமா? – காலா விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்

தனுஷ்-ஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் மைதானம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் ரஜினிகாந்தை வாழ்த்தி ரசிகர்கள் கோஷமிட்டப்படி இருந்தனர். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழா மேடை, முழுவதும் கருப்பு நிறத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ரஜினி உட்பட படக்குழுவினர் ஒருசிலரைத் தவிர அனைவரும் கருப்பு நிற உடையில் வந்திருந்ததால், மேடை முழுவதும் கருப்பு மயமாகக் காட்சி அளித்தது. நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக நடன இயக்குநர் சாண்டி, ரஜினி டயலாக்குகள் மற்றும் பாடல்கள் அடங்கிய தொகுப்புக்கு நடனமாடினார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சுமார் 15 நிமிடம் தனது…
Read More
விஜய் ஆண்டனியோட ‘அண்ணாதுரை’ பட பாடல்களை இலவசமா டவுண்லோட் செய்ய அனுமதி!

விஜய் ஆண்டனியோட ‘அண்ணாதுரை’ பட பாடல்களை இலவசமா டவுண்லோட் செய்ய அனுமதி!

புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான 'அண்ணாதுரை' யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா இன்று  -நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது. 'அண்ணாதுரை' படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான 'www.vijayantony.com ' மில் இப்பட பாடல்களை மக்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம். இந்த யுக்தியை தமிழ் சினிமா வரவேற்று உள்ளது. இது பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என…
Read More
பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு! – ரசூல் பூக்குட்டி!

பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு! – ரசூல் பூக்குட்டி!

பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற  ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையை வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார். விழாவில் பேசிய வைரமுத்து, “இது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ ஆர் ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தியாவின் கலை அடையாளங்கள். ரசூல் பூக்குட்டி ஆஸ்கர்…
Read More
சந்தானம் நடிக்கும்  “சக்க போடு போடு ராஜா ” – ஆடியோ ரிலீஸ் எப்போ?

சந்தானம் நடிக்கும் “சக்க போடு போடு ராஜா ” – ஆடியோ ரிலீஸ் எப்போ?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாகி இருக்கிறார் நடிகர் சந்தானம். இதே சந்தானம் நடிப்பில் `சர்வர் சுந்தரம்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சந்தானம் தற்போது `சக்க போடு போடு ராஜா', `ஓடி ஓடி உழைக்கனும்', `மன்னவன் வந்தானடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சேதுராமன் இயக்கத்தில் உருவாகி வரும் `சக்க போடு போடு ராஜா' படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். .மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம் .கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சியில் சமீபத்தில் படமாக்கபட்டது. அதிலும் முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார்.   "கலக்கு மச்சா டவுளத்துள கால வாரும்…
Read More
‘கேக்காமலே கேட்கும்’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

‘கேக்காமலே கேட்கும்’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கன்னடத்தில் 4 படங்களை இயக்கிய நரேந்திர பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘கேக்காமலே கேட்கும்’. சி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அறிமுகம் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மஞ்சுநாத், பிரார்த்தானா என்.பாபு ஆகியோரும் நடித்துள்ளன்ர். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் நரேந்திர பாபு படம் குறித்து பேசும்போது, ‘‘என் தாய் மொழி தமிழ் தான்! ஆனால் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன். கன்னடத்தில் 4 படங்களை இயக்கியிருக்கிறேன். ஐந்தாவது படமாக ‘கேக்காமலே கேட்கும்’ படத்தை தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக்கியிருக்கிறேன். சமீபகாலத்தில் நிறைய பேய் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த படங்களில் இருந்து…
Read More