சக்தி -படத்தில் வரலட்சுமியுடன் சரத் இளைய மகள் பூஜாவும் இணைந்தார்!

தமிழ் நடிகர் சங்கத்தலைவராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்தவர் சரத்குமார். இவர் தற்போது ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இணை கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் இவரது மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ், கன்னட, மலையாள சினிமாக்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ‘போடா போடி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, மர்மம் கொண்ட ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி களில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டனர். சாம்.சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தை பேப்பர் லேட் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் 15ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது.

‘சக்தி’ என்று பெயர் வைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வியாழக்கிழமை (இன்று) வெளியிடப்பட்டது. இதில், தலைமுடியை ஷார்ட்டாக கட் செய்து, சிறிய காதணியுடன், கூலர்ஸ் அணிந்தவாறு மிகவும் ஸ்டைலிஷாக தோன்றுகிறார் வரலட்சுமி. அவரது லுக் நகரப்புறத்தை சேர்ந்த கார்ப்பரேட் பணிக்கு செல்லும் மாடர்ன் பெண்மணி போன்று உள்ளது. இந்த போஸ்டரை சரத் பார்த்து மகிழ்ந்து தன் மகள் உள்ளிட்ட சக்தி டீமை வாழ்த்தி பாராட்டினார்.

இந்நிலையில், வரலட்சுமிக்கான லுக், காஸ்ட்யூமை அவரது தங்கையும், சரத்குமாரின் இளைய மகளுமான பூஜா சரத்குமார் வடிவமைத்துள்ளார். இந்த ஸ்டைலிஷ் லுக் குறித்து வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:

என்ன விட சிறந்த ஆடைகளை தேர்வு செய்வதில் பூஜா வல்லவர். நான் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளுக்கு அவர்தான் ஆடை தேர்ந்தெடுத்து கொடுப்பார். எனவே அவர் அதையே ஒரு பணியாக மேற்கொள்ள முடிவு செய்தோம்.

பெண்களை மையப்படுத்திய இந்தக் கதையில் ஏராளமான பெண்கள் கதாபாத்திரங்கள் இருப்பதால், அவரை இப் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகப்படுத்துவது சரியாக இருக்கும். என்னால் முடிந்த ஆலோசனைகளை அவருக்கு அளிப்பேன் என்று கூறினார்.