சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன் எப்படி இருக்கிறது ?

சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன் எப்படி இருக்கிறது ?

இயக்கம்: ஷ்யாம்-பிரவீன் நடிகர்கள்: சரத்குமார், சிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ் மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் இசை: கவாஸ்கர் அவினாஷ் தயாரிப்பு: சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி தமிழின் முன்னனி நடிகராக வலம் வரும் சரத்குமார் மீண்டும் நாயகன் வேடமேற்று நடித்திருக்கும் படம், அதுவும் இது அவரது 150 வது படம். மெமரீஸ், க் படங்களை இயக்கிய ஷ்யாம் பிரவீன் கூட்டணி மிஈண்டும் திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கும் படம் இது சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தாலும் அல்சைமர் என்ற மறதிநோயால் பாதிக்கப்படுகிறார். அவரது உயரததிகாரி அந்த கொலையாளியை கொலை செய்து விட்டு காணாமல் போகிறார். சில வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தொடர் கொலைகள் அதே பாணியில் நடைபெற ஆரம்பிக்கிறது. கொலையாளிக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு…
Read More
ஸ்மைல் மேன் போர்த்தொழில் மாதிரி இருக்காது  – சரத்குமார் !!

ஸ்மைல் மேன் போர்த்தொழில் மாதிரி இருக்காது – சரத்குமார் !!

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ் பேசியதாவது… எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார் தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு, எப்பொழுதும் தயாராக இருப்பார். அவரின் 150 படங்களுக்கும் மேல் இருக்கும் திரை அனுபவம், அறிவு எங்களை திகைக்க செய்தது. ஷ்யாமுக்கும் எனக்குமான நட்பு தனித்துவமானது. எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. கதை, சினிமாவுக்கு எப்படி முக்கியமோ, அதே போல் வாழ்க்கைக்கும் முக்கியம். கதை இருந்தால் தான் ஞாபகங்கள் இருக்கும், ஞாபகங்கள் தான்…
Read More
நிறங்கள் மூன்று திரைப்படம் எப்படி இருக்கிறது ?

நிறங்கள் மூன்று திரைப்படம் எப்படி இருக்கிறது ?

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அடுத்தடுத்து சரியான படங்களை கொடுக்க முடியாமல் தடுமாறினார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அதர்வா முரளி, அம்மு அபிராமி சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதர்வா, ரகுமான், சரத்குமார் என மூவருப் கதைகளை ஆந்தாலஜி போல தனித்தனியாக சொல்லி அதை இறுதியில் இணைத்திருக்கிறார்கள். ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, ஶ்ரீஜித் சரங் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. அதை இந்தப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதா என்றால் பாதிகிணறு தாண்டிய கதைதான் கார்த்திக் நரேனிடன் சினிமா தொழில் நுட்பம் அறிந்த நல்ல மேக்கிங் இருக்கிறது.…
Read More
மனிதர்களின் இருண்ட பக்கத்தை காட்டும் ‘நிறங்கள் மூன்று’ – சரத்குமார் !!

மனிதர்களின் இருண்ட பக்கத்தை காட்டும் ‘நிறங்கள் மூன்று’ – சரத்குமார் !!

நடிகர் சரத்குமாரின் ஒப்பற்ற நடிப்புத்திறன் அவர் நடிக்கும் படங்களின் தரத்தை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும். நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் ரஹ்மானுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறும்போது, ”நான் இத்தனை வருடங்களில் பல இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர்களின் தனித்தன்மையில் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அந்த வகையில், புதிய காட்சிகளை உருவாக்குவதில் கார்த்திக் நரேன் திறமையானவர். காட்சிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதோடு நடிகர்களை வித்தியாசமான பரிமாணத்தில் வெளிப்படுத்த தன்னால் முடிந்தவரை சிறந்ததை கொடுப்பார். மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் காட்டும். இதற்கு மேல் நான் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஆனால், பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதர்வா முரளி ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பின் மூலம் புதிய…
Read More
மழை பிடிக்காத மனிதன் எப்படி இருக்கிறது

மழை பிடிக்காத மனிதன் எப்படி இருக்கிறது

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் மாறியவர், விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர். இந்த இருவரின் கூட்டணியில் ஒரு புதிய தளத்தில் நல்லதொரு படம் வரும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது. விஜய் ஆண்டனி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, நடித்து வந்தார். ஆனால் இறுதியாக அவர் நடித்த சில படங்கள் கதைகளிலும் சரி, திரைக்கதையிலும் சரி ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. சோகமாக அந்த லிஸ்ட்டில் இந்தப் படமும் சேர்ந்து இருக்கிறது. மழை பிடிக்காத மனிதன் படத்தில் முதல் ஒரு நிமிடத்திற்கு அனிமேஷன் காட்சிகள் வருகிறது. அந்த அனிமேஷன் காட்சிகள் இந்த படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தின் தொடர்ச்சி என்பதாக சொல்கிறது. ஆனால்…
Read More
‘மழை பிடிக்காத மனிதன்’தான் எனது முதல் பிரம்மாண்டப்படம்!விஜய் ஆண்டனி!

‘மழை பிடிக்காத மனிதன்’தான் எனது முதல் பிரம்மாண்டப்படம்!விஜய் ஆண்டனி!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்".என்றார் இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது, " இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 'கருடன்', 'மகாராஜா' என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும்" என கூறினார் இயக்குநர் சசி பேசியதாவது,…
Read More
Hit அடித்ததா? Hit Lisst மூவி ?

Hit அடித்ததா? Hit Lisst மூவி ?

  ஹிட் லிஸ்ட் திரைப்படம் விமர்சனம் தமிழ் சினிமாவில் தமிழ் சினிமா வரலாறு மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக இருக்கும் அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் அட்லீஸ்ட் இந்த படத்தை ஒரு பிளாக்பஸ்டர் ரவிக்குமார் தயாரித்துள்ளார் அவரது உதவியாளர்கள் சூரியகதிர் காக்கலர் மற்றும் கே.கார்த்திகேயன் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அனுபமா குமார், ராமச்சந்திரா ராஜு, முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு அறிமுக ஹீரோவுக்கான கதையை வடிவமைத்து அவரை நிலை நிறுத்தும் எண்ணத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தை தந்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் இளைஞன் அம்மா தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் திடீரென அவர் என் அம்மாவும் தங்கையும் கடத்தப்படுகிறார்கள் முகமூடி அணிந்த வில்லன் அவரை மிரட்ட ஆரம்பிக்கிறான் போலீஸ் உதவி கொண்டு…
Read More
இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாஸினி வெளியிட்ட பரம்பொருள் படத்தின் டிரைலர்!

இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாஸினி வெளியிட்ட பரம்பொருள் படத்தின் டிரைலர்!

  கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான 'பரம்பொருள்' திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார். சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, 'ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, 'டான்', 'சாணிக் காயிதம்', 'ராக்கி', 'எட்டு தோட்டாக்கள்' படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக…
Read More
இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை 'பெட்டிக்கடை', 'பகிரி' ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, 'மிக மிக அவசரம்' புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ' சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரையுலக‌ பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேசியதாவது... இந்த விழாவில் நான் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் என் அன்பு சகோதரர் சேரன் , அவர் நடித்த 'தமிழ்க்குடிமகன்' அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக 'தமிழ்க்குடிமகன்' இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த…
Read More
நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

"போடா போடி" படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். பின்னர் "தாரை தப்பட்டை" மற்றும் "விக்ரம் வேதா" போன்ற பல வெற்றிப் படங்களில் நடிச்சிருக்கார். அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்று இருக்கார். நடிப்பு மட்டுமின்றி, வரலட்சுமி சமூக பணிகளில் ஈடுபட்டு உள்ளார். மேலும் பல்வேறு சமூக பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் விலங்குகளின் உரிமைகளுக்காக ஒரு வலுவான வக்கீல் மற்றும் விலங்கு நலனை மேம்படுத்துவதற்காக பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஹீரோயினாக மட்டுமே ஜோடி சேர்ந்து நடிப்பேன் என்பது இல்லாமல் பெண்கள் சார்ந்த படங்களின் அதிகமாக கவனம் செலுத்தி வாறார். இவர் தற்போது 50 படங்கள் நடித்து இருக்கிறார். இது குறித்து நெகிழ்ச்சியான பதிவு வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்..அது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்.…
Read More