துல்கர் சல்மானுக்கு கொரோனா !

0
143

கொரோனா இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது இதில் இப்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் மலையாள முன்னணி நடிகர் துல்கர் சல்மான்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவு:

“சற்று முன்னர் தான் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் தனிமையில் உள்ளேன். காய்ச்சலுக்கான லேசான அறிகுறிகள் உள்ளது. மற்றபடி நான் நலமாக இருக்கிறேன்.

கடந்த சில நாட்களாக படப்பிடிப்பின் போது என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டு மேலும் அறிகுறிகள் தெரிந்தால் சோதனை செய்து கொள்ளுங்கள்.

இந்த பெருந்தொற்று காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்”