01
Dec
ரசிகர்கள் விரும்பும் வகையில் பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி முன்னணி OTT தளமாக ஜீ5 வளர்ந்து வருகிறது. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ 'மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம் ‘ என ஒரே நேரத்தில் விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் வகையில் தரமான வெற்றிப்படங்களை வழங்கி ஜீ5 ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ - பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3ல் வெளியாகிறது. இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினரை சந்தித்தனர். இவ்விழாவில் தயாரிப்பாளர் A.L அழகப்பன் பேசியதாவது… மாஸ்டர் செல்வா இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையை, பல வருடங்களாக மனதில் வைத்து, சரியான படத்திற்கு காத்திருந்து, இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தம்பி விஜய் இப்படத்திற்கு கதை கொடுத்திருக்கிறார்.…