வேலையில்லா பட்டதாரி 2 – அப்டேட் ரிப்போர்ட்!

0
291

‘வேலையில்லா பட்டதாரி’ என்னும் விஐபி படத்தின் ஸ்கோர் செய்த நடிகர் தனுனுக்கு அந்தப் படத்தின் வெற்றியே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத வைத்ததாம். தனுஷின் கதை மற்றும் வசனத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்துக்காக நடிகை கஜோலை பாலிவுட் சினிமாவிலிருந்து அழைத்து வந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கஜோல் நடித்திருப்பதால் படத்துக்கான அதிர்வு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. அத்துடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி ஆகியோர் இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளனர்.

விஐபி-2 திரைப்படத்தின் புரமோஷன்களும், டிக்கெட் முன்பதிவும் முழுவேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தமிழ் சினிமாவை  கொஞ்சம் பாதித்ததாக சிலர் சொல்கிறார்கள், ஆனால்  நேற்று அபிராமி ராமநாதன் ஒரு விழாவில், நல்ல படம் வந்தால் எந்த வரியாலும் சினிமாவுக்கு பாதிப்பில்லை’ என்று சொன்னது போல்   விஐபி-2 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது.

முன்னதாக  தமிழ் – தெலுங்கு – இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நேரடியாக ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்த விஐபி-2 திரைப்படத்தின் தெலுங்கு – இந்தி பதிப்புகள் ஒருவாரகாலம் தள்ளிப்போகின்றன என்ற செய்தி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்திருந்தாலும், மலையாளத்தில் டப் செய்யப்பட்டிருக்கும் விஐபி-2 பதிப்பும் ஆகஸ்டு 11ஆம் தேதி ரிலீஸாவதால், தெலுங்கு – இந்தி பதிப்புகளின் தாமதமான ரிலீஸ் பலம் பெறுகிறது.

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஹிட் ஆகி, மலை போன்ற எதிர்பார்ப்பை இந்தி திரையுலகிலும், தெலுங்கு திரையுலகிலும் ஏற்படுத்தும் பட்சத்தில் விஐபி-2 திரைப்படத்தின் தாமதமான ரிலீஸ் தயாரிப்பாளர்களுக்கும், படத்தை வாங்கி ரிலீஸ் செய்பவர்களுக்கும் நல்ல வசூலை உரு வாக்கிக்கொடுக்கும். ஏற்கெனவே சொன்னது போல்  வரலாறு காணாத அளவில் மலேசியாவில் 550 திரையரங்குகளில் ரிலீஸாவது போலவே, தொடர் விடுமுறையான இந்த 4 நாட்களில்(ஆகஸ்ட் 12 முதல் 15 வரை) தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் வேலையில்லா பட்டதாரி 2 மிகப்பெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கான புரமோஷனுக்காக விஐபி-2 டீம் நேற்று (08.08.17) கொச்சினிலுள்ள ஒபெரான் மாலுக்கு சென்றிருந்தனர்.

 

தற்போது  ‘விஐபி-2’ படத்தின் கேரள விநியோக உரிமையை ‘மாக்ஸ் லேப்’ மற்றும் ‘ஆசீர்வாத் சினிமாஸ்’ நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் நடிகர் மோகன்லால் மற்றும் அவரது மானேஜர் பெரும்பாவூர் ஆண்டனியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கு முன் இதே நிறுவனம்தான் ரஜினியின் ‘கபாலி’ படத்தையும் வாங்கியது. ‘கபாலி’யைத் தொடா்ந்து இந்த நிறுவனம் வெளியிடும் தமிழ்ப்படம் ‘விஐபி-2’ இந்த படத்தை கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனா். விஐபி-2 திரைப்படத்தின் இத்தனைப்பெரிய வெற்றி தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தையும், படக் கலைஞர்களுக்கு நற்பெயரையும் வாங்கித்தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு படம் கொடுக்கும் மகிழ்ச்சியான அனுபவம் மட்டும்தான் அனுகூலமா? என்றால், வேறொன்றும் இருக்கிறது.

விஐபி-2 படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் V கிரியேஷன்ஸ் நிறுவனம் டிவிட்டரில் ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி, இந்தப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பப்படுகிறவர்கள், விஐபி-2 படத்தின் போஸ்டரில் தனுஷ் நண்பர்களுடன் அமர்ந்திருப்பதுபோல, அவர்களது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுத்து டிவிட்டரில் #Gangvip2 என்ற ஹேஷ்டேகில் பகிரவேண்டும். இதில் வெற்றிபெறும் நண்பர்கள் குழுவுக்கு ஆச்சர்யமளிக்கும் பரிசு காத்திருக்கிறது என்று அவர்கள் அறிவித்ததை மட்டும் சொன்னால் என்ன பரிசு கிடைக்குமென்றே தெரியாதல்லவா?

அதனால், V கிரியேஷன்ஸில் விசாரித்தபோது, தனுஷுடன் ஃபோட்டோ எடுக்கும் வாய்ப்பு அல்லது விஐபி-2 படத்துக்கான டிக்கெட்கள் வழங்கப்படலாம் எனக் கூறினார்கள். எனவே, காலம் தாழ்த்தாமல் அனைத்து நண்பர்களையும் அழைத்து ஃபோட்டோ எடுத்து உடனே டிவிட்டரில் பகிர்ந்து அந்த ஆச்சர்ய பரிசை வெல்லுங்கள்.