‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குனரின் அடுத்த படைப்பான (The Vaccine War) ‘தி வாக்சின் வார்’

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் அடுத்த படைப்பான (The Vaccine War) ‘தி வாக்சின் வார்’ திரைப்படம் பல்லவி ஜோஷியின் I Am Buddha புரொடக்ஷன்ஸ் கீழ் தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15, 2023 அன்று Abhishek Agarwal Arts நிறுவனம் மூலமாக 11 மொழிகளில் வெளியாகிறது

திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் கடைசி திரைப்படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் அந்த வருடத்தில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. சமீபத்தில், விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார், படத்தின் தலைப்பு குறித்த யூகத்தை மட்டும் கொடுத்துவிட்டு நெட்டிசன்களை அதற்கு கருத்து கூற வைத்தார். இந்த புதுமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இப்போது ரசிகர்களின் அனைத்து காத்திருப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர் தனது அடுத்த படத்தின் தலைப்பாக ‘தி வாக்சின் வார்’ என்ற பெயரை அறிவித்துள்ளார். ‘தி வாக்சின் வார்’ திரைப்படம் நாட்டில் கோவிட்-19 மற்றும் தடுப்பூசி பயிற்சிகள் பற்றிய சில அத்தியாயங்களை பற்றியதாக இருக்கும் என்பது படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் மூலம் தெளிவாகத் தெரிகிறது. போஸ்டரில் கோவிட் தடுப்பூசி அடங்கிய மருந்து குப்பி ஒன்றைக் பார்க்கலாம், மேலும் அதில் : “A war you didn’t know you fought. And won.” அதாவது நம் கண்ணுக்கு தெரியாமல் வந்த போரை போராடி வென்ற கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15, 2023 சுதந்திர தினத்தன்று இப்படம் வெளியாகுமென்ற என்ற செய்தியுடன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

நம் தேசத்தின் அடிநாதமாக இருக்கும் சினிமா பார்வையாளர்களுக்காகவும், நம் நாடு உண்மையில் என்ன சாதித்துள்ளது என்பதை உலகமே கவனிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திரைப்படத்தை உருவாக்க விவேக் திட்டமிட்டுள்ளார். அதனால், இப்படம் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், உருது மற்றும் அசாமி உள்ளிட்ட 11 மொழிகளில் வெளியாகவுள்ளது. .

இப்படம் குறித்து I Am Buddha Productions சார்பில் தயாரிப்பாளர் பல்லவி ஜோஷி கூறியதாவது:
“இந்தப் படம் நமது நாட்டின் சிறந்த உயிரியல் விஞ்ஞானிகளின் வெற்றியைக் கொண்டாடுகிறது. தடுப்பூசி போருக்காக அவர்கள் செய்த தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு நாம் செலுத்தும் ஒரு அர்பணிப்பாக இந்த திரைப்படம் இருக்கும்.”

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்குப் பிறகு விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் அடுத்த சினிமாவை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஆச்சர்ய அறிவிப்பாக இப்பட அறிவிப்பு அமைந்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பின் மூலம், இயக்குனர் இந்த விசயத்தை மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பார் என்ற முன்னோட்டத்தை காட்டி, நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இப்படத்தை I Am Buddha Productions சார்பில் பல்லவி ஜோஷி தயாரிக்கிறார்.

முன்னதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்காக விவேக் அக்னிஹோத்ரியுடன் இணைந்த அபிஷேக் அகர்வால் தனது Abhishek Agarwal Arts நிறுவனம் மூலம் நாடு முழுவதும் ‘தி வாக்சின் வார்’ படத்தை வெளியிடுகிறார்.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவல்கள்விரைவில் வெளியாகும். தடுப்பூசிக்காக, நமது விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளை பெரிய திரையில் கொண்டு வருவதற்கு யார் பொருந்துகிறார்கள் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.