21
Dec
தமிழ் திரையுலகில் குறிப்பிடதக்க படைப்புகளால் புகழ்பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ளது விடுதலை 2 திரைப்படம். விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து துவங்கி அப்படியே ஆரம்பித்து வாத்தியாரின் வாழ்க்கை கதையை சொல்கிறது விடுதலை 2. வாத்தியார் கைதுக்கு பிறகு காவலதிகாரி, கலக்டர், அமைச்சர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அந்த கைதை எப்படி அறிவிக்கலாம் என விவாதிக்கிறார்கள். கைது விவரம் வெளியில் பரவ அதை தடுக்க நினைத்து, வாத்தியார் விஜய் சேதுபதியை, காட்டுக்குள் சிறு குழுவை வைத்து வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள், ``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன?…