விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

0
37

 

J4 ஸ்டூடியொஸ் சார்பில் T ஜெபா ஜோன்ஸ் மற்றும் S. ராஜரத்தினம் தயாரிப்பில், இயக்குநர் J சுரேஷ் இயக்கத்தில், குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜூ கீப்பர். ஒரு புலி வளர்க்கும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு புதங்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

நாயகி ஷ்ரீன் பேசியதாவது..
இந்தப்படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என்னை நம்பி வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு என் நன்றிகள். புகழ் வாழ்த்துக்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் சுரேஷ் பேசியதாவது..
இப்படத்தை சிறப்பாக கொண்டுவரக் காரணமாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என் முதல் நன்றிகள். சூரி என் நண்பர் மிக மிக அடக்கமானவர் அவர் காட்டும் பணிவு வியக்க வைக்கும். இந்த பணிவு உங்களை பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும். இந்தப்படத்தின் மிகப்பெரிய தூண் யுவன். 25 ஆண்டு கால நண்பர். சிறு வயது முதல் அவரைத் தெரியும். இந்தக் கதையை முதலில் சொன்னதே யுவனிடம் தான். அவரே தயாரிக்கலாம் என்றார் ஆனால் அது சில காரணங்களால் நடக்கவில்லை. நாயகன் தேடி யோகிபாபுவிடம் கேட்டோம் அவரும் ஓகே சொன்னார். ஆனால் அவர் டேட் ஒத்துவரவில்லை. அப்போது தான் டிவியில் புகழின் ஒரு ஷோ பார்த்தேன். அவரை வரவைத்து கதை சொன்னேன் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனால் படத்திற்கு தயாரிப்பு சரியாக கிடைக்காமல் இருந்தது. அப்போது தான் ஜோன்ஸ் அறிமுகமானார் அவரிடம் சொன்ன போது உடனே ஆரம்பிக்கலாம் என்றார். படம் அப்படித்தான் உருவானது. புகழ் இப்படத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். கதை விவாதத்திற்கே வந்துவிடுவார். படம் முழுக்க புலியுடன் நடித்துள்ளார். புகழுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. புலியை வைத்து ஷூட் செய்தது மிகப்பெரிய பாடமாக அமைந்தது. ஷ்ரீன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ஆனால் புகழுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் அவருக்கு நன்றிகள். தன்வீர் மிக அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் எந்த ஆபாசமும் இல்லாத ஒரு ஃபீல் குட் மூவி. உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

புலிக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாத சின்ன தம்பி.. விஜய் டிவி புகழின் MR. ZOO KEEPER ட்ரெய்லர் - Cinemapettai
நடிகர் புகழ் பேசியதாவது..
இந்தப்படத்தில் ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன் என எல்லா இடத்திலும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தம்பிக்காக வருவேன் என வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய தாம்சன் சாருக்கு நன்றி. இதே பிரசாத் லேபுக்கு வெளியே கார் வாஷில் வேலை செய்துள்ளேன், இலை எடுத்திருக்கிறேன் இன்று இங்கு என் படம் இசை விழா நடப்பது மகிழ்ச்சி. இயக்குநர் என்னை அழைத்து நீ ஹீரோ புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். ஓகே சார் பண்ணிடலாம் என்றேன். யுவன் சார் மியூசிக் என்றார் ஆனால் ஷூட் ஒரு வருடம் ஆகும் என்றார். நிஜத்திலேயே புலியை கூட்டி வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன். இப்படத்தை நம்பி முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றிகள். பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷ்ரீன் அவர்களுக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். ராதிகா மாஸ்டர், ஃபைட் மாஸ்டர் எல்லோருக்கும் என் நன்றிகள். பெரிய பெரிய ஹீரோ படங்களுக்கு மியூசிக் போடும் யுவன் சார் எனக்காக மியூசிக் போட்டதற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் சூரி பேசியதாவது…
இந்தப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றிகள். முழுக்க காட்டுக்குள் படம் எடுத்துள்ளார்கள் காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். 3 வருடம் காட்டுக்குள் நானும் படத்தில் நடித்திருக்கிறேன். புலி ஊருக்குள் வந்துவிட்டது என்கிறார்கள் ஆனால் நாம் தான் காட்டை ஆக்கிரமித்துள்ளோம் நல்ல கருத்துடன் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். வாழ்த்துக்கள். தம்பி புகழ் இன்னும் பல உச்சங்கள் செல்வான் அவனுக்கு வாழ்த்துக்கள். யுவன் இருக்கிறார் என்றார்கள் அவர் இருந்தாலே வெற்றி தான். என் கருடன் படத்திற்கும் இசையமைகிறார். எப்போதும் திரையுலகில் அவர் ராஜ்ஜியம் தான். அவருக்கு என் நன்றிகள். புகழிடம் நிறைய திறமை இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் அவன் பெயர் நுழைந்துள்ளது. அவனிடம் நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும் அதை விட அவன் நிலைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷ் மிகத் திறமையானவர் அவருக்கு வாழ்த்துக்கள்.
படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.