சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் பட டீஸரை வெளியிட்டார் பாலா!

 

அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில் தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூரி கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வில்

 

நடிகர் சூரி பேசியதாவது,

 

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி இங்க ஹிட் ஆனது போல தெலுங்கில் பெரிய ஹிட். அந்த காமெடியை தன்ராஜ்தான் நடித்ததாக சொன்னார். அப்போதிலிருந்து அவர் என்னுடைய நம்பராக அறிமுகமானார்.

 

அப்பா மகன் உறவு தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இந்தப்படமும் கட்டாயம் வெற்றி பெரும். ஒரு படம் எடுப்பதை விட மக்களிடம் கொண்டு சேர்பதுதான் சிரமமாக இருக்கிறது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல நிறைய சிரமம் எடுத்துள்ளனர். கனி அண்ணன் நெகட்டிவாக பேசினதா நான் கேட்டதே இல்லை.. உங்கள் உழைப்பு இந்தப்படத்திலும் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது,

 

நெகிழ்வான தருணம். ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் அப்படியான வேறொரு கதை. தன்ராஜிக்கு தகப்பனும் இல்லை தாயும் இல்லை. தானே உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும் அப்பா கதை என்றாலே வாங்க கேட்ப்போம் பண்ணுவோம் என்று சொல்லி விடுவேன். வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்திருப்பவர்கள் சிறப்பாக படம் பண்ணிடுவாங்க தன்ராஜை அப்படி நம்பி இந்த படத்துக்குள்ள வந்தேன். ஒவ்வொரு தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவுக்குள் அவ்வளவு சிக்கல்கள் இருக்கு. இன்னும் 10 படம் கூட பண்ணலாம். தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. படபிடிப்பில்தான் முதல் முறையாம பார்த்தேன். என்னைப் பார்க்காமலே என் மீது நம்பிக்கை வைத்த தம்பி. மாபெரும் உறவோடு வந்து இருக்கிறார் வாழ்த்துகள் தம்பி. இந்தப் படத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

 

இயக்குனர் பாலா பேசியதாவது,

 

சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக்கூடியவர். மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

error: Content is protected !!