Dune திரைப்படம் மிரட்டலாக இருக்கிறதா ?

Dune திரைப்படம் மிரட்டலாக இருக்கிறதா ?

Dune விமர்சனம் இயக்கம் - Denis Villeneuve நடிகர்கள் - Timothée Chalamet, Rebecca Fergusson, Oscar Isaac, Josh Brolin, Stellan Skarsgård   கதை - Arrakis என்கிற ஒரு கிரகத்தில் Melange என்கிற ஓர் பொருள் உற்பத்தியாகிறது. முழுக்க லாபம் தங்க துகள்களை சலித்து எடுத்து லாபம் பார்க்க மொத்த உலகமும் ஆசைப்படுகிறது. Atreides அரசனுக்கு Arrakis அங்கு அந்த புதையலை எடுக்கும் பொறுப்பை தருகிறது. இப்பகுதியில் வாழும் பழங்குடியினருக்கும் அப்பகுதியை தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வர முற்படும் Arrakisக்கும் பிரச்சனை இருக்கிறது இதில்  Atreides அரச குடும்பம் பலியிடப்பட்டுகிறது அதிலிருந்து இளவரசன் எப்படி தப்பிகிறான் என்பது தான் இந்த முதல் பாகத்தின் கதை Dune க்கு பெரிய வரலாறு உண்டு, தமிழில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இணையான வரலாறாக அதை சொல்லலாம். 1965 ல் Frank Herbert என்கிற நாவலாசிரியர்,எழுதிய நாவல் தான் இது.…
Read More
ஃபில்டர் கோல்ட் திரை விமர்சனம் !

ஃபில்டர் கோல்ட் திரை விமர்சனம் !

இயக்கம் - விஜய பாஸ்கர் நடிகர்கள் - விஜய பாஸ்கர், டோரா ஶ்ரீ, சுகுமார் சண்முகம் கதை - ஒரு குழுவாக சமூகத்தின் அழுக்குகளோடு அரவாணிகள் வாழ, அவர்களின் வாழ்க்கையில், ரௌடியின் சிறு பையன் செய்யும் பிரச்சனையால், அவர்கள் வாழ்வு எப்படி மாறுகிறது என்பதே கதை தமிழ் சினிமா கேலியும் கிண்டலும் மட்டுமே செய்த மூன்றாம் பாலினத்தவரான அரவாணிகள் வாழ்வையும், அவர்களின் வலிகளையும், ரத்தமும் சதையுமுமாக சொல்ல முயன்றிருக்கிறது இந்த ஃபில்டர் கோல்ட். அதற்காகவே இப்படத்தை பாராட்டலாம். நம் சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், தனி மனித உரிமைகளுக்கே இன்னும் சரியான தீர்வுகளே கிடைக்கவில்லை. இதில் அரவாணிகள் பிரச்சனைகள் எல்லாம் சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிற உலகில், அவர்கள் வாழ்க்கையை கொஞ்சம் நெருங்கி பதிவு செய்துள்ளது இந்த சினிமா. அரவாணிகள் பற்றி சமூக வலைதளங்களில், அரசியல் மேடைகளில் பொது வெளிகளில் மாரியாதையும் மதிப்பும் பாராட்டுகள் கிடைத்தாலும், நிஜத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும்.…
Read More
ஜெயித்திருக்கிறதா சிவகுமாரின் சபதம் !

ஜெயித்திருக்கிறதா சிவகுமாரின் சபதம் !

சிவகுமாரின் சபதம் கதை திரைக்கதை இயக்கம் இசை - ஹிப் ஹாப் ஆதி நடிப்பு - ஹிப் ஹாப் ஆதி, மாதுரி கதை : பணத்திற்காக காஞ்சிபுரத்தின் பழம்பெருமை மிக்க தறிநெய்யும் குடும்பத்தை ஏமாற்றும் ஒருவனுக்கும், தறி நெய்யும் குடும்பத்திற்கும், உள்ள உறவு சிக்கல்கள் தான் கதையின் மையம், தறி நெய்யும் குடும்பம் தறியின் பெருமையை எப்படி காப்பாற்றி, ஜெயிக்கிறது என்பது தான் கதை. தறிநெய்பவர்களின் பெருமையை கஷ்டத்தை சொல்ல கிளம்பியிருக்கிறார் ஆதி. வழக்கமாக அவரது படங்கள் கல்லூரி இளைஞர்களை குறி வைத்ததாகவே இருக்கும். ஆனால் இம்முறை காலேஜ், நண்பர்கள், காதல் எனும் அவரது வழக்கமான ரூட்டை மாற்றி குடும்பத்திற்குள் போயிருக்கிறார் ஆனால் அது ஏனோ ஒர்க் அவுட் ஆகவில்லை. தறிநெய் தொழில் தான் படத்தின் மையம், ஆனால் அது கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது. அதுவும் விக்ரமன் பட லாலா லாலா போல எந்த டீடெயிலுங்கும் இல்லாமல் பாடுகிறார்கள்.…
Read More
ஆறாம் நிலம் – போரின் பிந்தைய ஈழ நிலத்தின் கோர முகத்தை காட்டும் படைப்பு

ஆறாம் நிலம் – போரின் பிந்தைய ஈழ நிலத்தின் கோர முகத்தை காட்டும் படைப்பு

இயக்கம் - ஆனந்த ரமணன் நடிகர்கள் - நவயுகா, சிறுமி அன்பரசி, மன்மதன் பாஸ்கி கதை - போர் முடிந்த பிறகு ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வு எப்படி இருக்கிறது அவர்கள் எந்த மாதிரியான வலிகளை அனுபவிக்கிறார்கள் என்பதை சொல்வது தான் ஆறாம் நிலம். வாழ்வின் பதிவு தான் இப்படம் ஈழத்திற்க்கும் தமிழ்மக்களுக்கும் உள்ள உறவு ஆயிரம் ஆண்டு நீளும் தொப்புள் கொடி தொடர்பு. போர் நடக்கும் போது நம் தாய் தமிழ் மக்களின் அந்த போரால் எந்தளவு பாதிக்கப்பட்டார்கள் அன்றைய போரின் நிலைகள் எல்லாம் உலகம் முழுக்க அன்றைக்கன்றே விவாதிக்கப்படும் அளவு நமக்கு அந்த செய்திகள் வந்தடைந்தது ஆனால் போர் முடிந்த பிறகு, இப்போது அம்மக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது , இப்போதாவது அவர்களுக்கான நிம்மதி கிடைத்திருக்கிறதா என்பதற்கு பதில் சொல்லும் படமாக, அவர்களின் வாழ்க்கையின் வலியை நம் முகத்தில் அறைந்ந்து சொல்லியிருக்கிறது இப்படம்.…
Read More
“சின்னஞ்சிறு கிளியே”  இயற்கை மருத்துவத்தின் பெருமை சொல்லும் படம்

“சின்னஞ்சிறு கிளியே” இயற்கை மருத்துவத்தின் பெருமை சொல்லும் படம்

இயக்கம் - சபரிநாதன் முத்துப்பாண்டியன் நடிகர்கள் - செந்தில்நாதன், அர்ச்சனா கதை - பிரசவத்தில் தன் மனைவியை காவு கொடுத்த ஒருவனின் மகள் கடத்தப்படுகிறாள். அதன் பின்னணியில் உள்ள ஆங்கில மருத்துவ கோர முகமூடியை கிழித்து இயற்கை மருத்துவத்தின் பெருமையை அவன் வெளிக்கொண்டுவர முயல்கிறான் “சின்னஞ்சிறு கிளியே” உலகம் முழுக்க 24 திரைவிழாக்களில் கலந்துகொண்டு, விருதுகளை குவித்திருக்கும் படம். வருமுன் காப்போம் எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் நம் இயற்கை மருத்துவத்தின் பெருமையை சொல்ல முயன்றிருக்கிறார்கள். பல விசயங்களை சரியாகவும் பரபரப்பாகவும் சொல்லவும் செய்திருக்கிறார்கள். படத்தின் இடைவேளை வரை கதையில் எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை நாயகன் நாயகி சந்திப்பது, காதலிப்பது கல்யாணம் செய்வது அவர்கள் குழந்தை பிறப்பது என வழவழவென இழுத்து கொண்டிருக்கிறது, குழந்தை கடத்தப்படும் நொடியில் தான் படத்தின் உண்மையான கதை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கதை பரபரவென செல்கிறது. இதை திரைக்கதையில் சரி செய்திருந்தால் இன்னுமே…
Read More
சூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்

சூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்

சூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த, மந்திரவாதிப்பெண்னை கூட்டி வர மந்திர தந்திரம் நிறைந்த யாரும் நுழையாத ஒரு மலை கிராமத்திற்குள், காதலி வேஷமிட்ட தன் நண்பனுடன் நுழைகிறான். மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த அந்த ஊருக்குள் இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து எப்படி தன் ஊருக்கு அழைத்து வருகிறான் என்பதே கதை. முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில் ஒரு ச்வீட் சர்ப்பரைஸாக வந்துள்ளது சூ மந்திரகாளி. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் தான் ஃபேண்டஸி சிந்தனை அதிகம் இருக்கும். நம் ஊரில் முண்டாசுப்பட்டி மாதிரி சிந்தனைகள் அபூர்வம். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் வந்துள்ளது இந்தப்படம். படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் எல்லாம் எதுவும் இல்லை சிரிக்க சிரிக்க மேஜிக் மட்டுமே…
Read More