Dune திரைப்படம் மிரட்டலாக இருக்கிறதா ?

Dune விமர்சனம்

இயக்கம் – Denis Villeneuve

நடிகர்கள் – Timothée Chalamet, Rebecca Fergusson, Oscar Isaac, Josh Brolin, Stellan Skarsgård

 

கதை – Arrakis என்கிற ஒரு கிரகத்தில் Melange என்கிற ஓர் பொருள் உற்பத்தியாகிறது.

முழுக்க லாபம் தங்க துகள்களை சலித்து எடுத்து லாபம் பார்க்க மொத்த உலகமும் ஆசைப்படுகிறது. Atreides அரசனுக்கு Arrakis அங்கு அந்த புதையலை எடுக்கும் பொறுப்பை தருகிறது.

இப்பகுதியில் வாழும் பழங்குடியினருக்கும் அப்பகுதியை தங்களது

ஆளுகையின் கீழ் கொண்டு வர முற்படும் Arrakisக்கும் பிரச்சனை இருக்கிறது இதில்  Atreides அரச குடும்பம் பலியிடப்பட்டுகிறது அதிலிருந்து இளவரசன் எப்படி தப்பிகிறான் என்பது தான் இந்த முதல் பாகத்தின் கதை

Dune க்கு பெரிய வரலாறு உண்டு, தமிழில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இணையான வரலாறாக அதை சொல்லலாம். 1965 ல் Frank Herbert என்கிற நாவலாசிரியர்,எழுதிய நாவல் தான் இது. அப்போதே இதை படமாக எடுக்க பலர் போட்டியிட்டனர். ஆனால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டது. இடையில் பல படங்கள் இக்கதைக்கருவை காப்பியடித்து எடுக்கப்பட்டு வெற்றிபெற்றன. அதில் ஸ்டார் வார்ஸ் மிக முக்கியமான படம் .  1984ல் இயக்குநர் David linch இதை படமாக்கினார்.   இப்போது இயக்குநர் Denis Villeneuve இதை பிரமாண்டமான காவியமாக மாற்றியிருக்கிறார்.

இப்போது கதைக்களு செல்லலாம் கதை மிகவும்  புரிந்து கொள்ள சிக்கலாக இருக்கும் இக்கதை 10191 ல் நடக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமெனில் Arrakis அரச குடும்பம் Atreides அரச குடும்பத்தை அழிக்க நினைக்கிறது அதனால் கடும் சவால்கள் நிறைந்த பாலைவன பகுதிக்கு தங்கம் எடுக்க அமைதி ஒப்பந்ததின் பெயரில் Atreides குடும்பத்தை அனுப்புகிறது அங்கு வைத்து அவர்களை கொல்ல முயற்சிக்க அதிலிருந்து இளவரசனும் ராணியும் தப்புகிறார்கள். ராணி முன்னாள் சூனியக்காரி என்பதால் தன் மகனுக்கும் பல சக்திகளை ஊட்டி வளர்க்கிறாள். அவனுக்கு எதிர்காலம் வரும் முன்னே தெரிகிறது. பெரும் அரசியலில் சிக்கும் தன் அரச குடும்பத்தை எப்படி காக்கிறான் என்பதே  Dune கதை.

சூழ்ச்சிகளிலிருந்து இளவர்சன் தப்பிக்கும் எளிய கதை தான் அதை சொன்னவிதத்தில் தான் மிரட்டியிருக்கிறார்கள். இயக்குநர் Denis Villeneuveக்கு என ஒரு கதை சொல்லும் பாணி இருக்கிறது. மிக மெதுவாக நகரும் திரைக்கதை அமைப்பு ஆனால் ஆழமான காட்சி அமைப்புகள் இதிலும் அதையே தான் செய்திருக்கிறார். Dune படித்தரசிகர்களுக்குஇப்படம்பொக்கிஷம்

படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் வடிவமைப்பும் பிரமாண்டமும் மிரட்டலாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் காட்டப்படும் கிரகத்தின் நுண்ணிய விவரங்கல் தொழில்நுட்பத்தில் அசத்தலாக அமைந்திருக்கிறது. புதை மணல் கிரகமும் புதை மணல் மிருகமும் காட்டப்பட்ட விதம் அருமை. புதை மணலில் சிக்கிக்கொள்ளும் காட்சிகளும் தப்பிக்கும் காட்சியும் பரபரப்பாக உள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து நடித்திருந்தாலும் யாருக்கும் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. கதை தாய் மகனான Timothée Chalamet, Rebecca Fergusson,  இருவரை சுற்றித்தான் வருகிறது.  மிக மெதுவாக நகரும் திரைக்கதை இப்படம் பற்றி அறியாதவர்களை சோதிக்கிறது.

இப்படம் இரண்டு பாக திரைப்படம் என்பதால் படத்தின் முக்கிய இறுதிக்கட்டம் இரண்டாம் பாகத்தில் தான் நிகழும் இப்படத்தின் முன் விவரங்கள் மட்டுமே சொல்லப்படுவது  படம் பார்ப்பவர்களை குழப்புகிறது. முழுக்க முழுக்க இரண்டாம் பாகத்தை நோக்கியே படம் அமைக்கப்பட்டிருக்கிறது. இசை நம்மை வேறொரு கிர்கத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஒளிப்பதிவு பெரும் மாயாஜாலமே நிகழ்த்தியிருக்கிறது.

Dune பற்றி அறிந்தவர்களும் படித்தவர்களும் படத்தை கொண்டாடுவார்கள் மற்றவர்களுக்கு இது ஒரு புரியாத ஹாலிவுட் பிரமாண்டம் ஆனாலும் ஹாலிவுட் ஆக்சனை விரும்புபவர்கள் தரிசித்து விட்டு வரலாம்.