03
Apr
தயாரிப்பு - டில்லி பாபு நடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா இயக்கம் - PV ஷங்கர் அறிமுக இயக்குநர் PV ஷங்கர் இயகியுள்ள இப்படம், கோவை வட்டார வழக்குடன் ஒரு மலை கிராம மக்களின் கதையை சொல்கிறது. சிறு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு வாலிபன் வாழ்க்கையில் காத லும் அரவணைப்பும் கிடைக்க, அவன் என்ன செய்வான் என்பது தான் கள்வன். சத்திய மங்கலம் பகுதியில் உள்ள கிராமத்தில் யானை மிதித்து சிலர் இறக்கிறார்கள், அங்கு சில திருட்டு வேலைகள் செய்யும் இளைஞனான ஜீவி, இவானாவை காதலிக்கிறார். அவரைக் கவர்வதற்காக முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தன்னோடு அழைத்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். இந்த நேரத்தில் அக்கிராமத்தில் யானை மிதித்து பல பேர் சாக, அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து அங்கு நடக்கும் திருப்பங்களும், சுவாரசியங்களும் தான் திரைப்படம்…