தோனி தயாரித்த முதல் படம் வெற்றியா ? தோல்வியா ?

 

இயக்கம் – ரமேஷ் தமிழ்மணி

நடிப்பு – ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர் ஜே விஜய்.

 

காதலுனுக்காக வருங்கால மாமியாருடன் பழக ஒரு டிரிப் போகிறாள் காதலி. மாமியாரும் மருமகளும் போகும் டிரிப் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் இந்தப்படம். கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் வந்துள்ள முதல் படம் என்பது சிறப்பு.

எல்லாம் ஓகே படம் எப்படி?

கதை

ஹரீஷ் இவானா இருவரும் காதலர்கள் இருவர் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். ஹரீஷின் அம்மாவுடன் வாழ வேண்டுமா என தயங்குகிறார் இவானா, கல்யாணத்தை நிறுத்திவிடுகிறார். ஹரீஷை மறக்க முடியாததால் நதியாவுடன் குடும்பமாக ஒரு டிரிப் போய் பழகலாம் என ஐடியா தருகிறார் இந்த விபரீத ஐடியா ஒர்க் அவுட் ஆனதா என்பதே படம்.

படத்தின் ப்ளஸ்

உலகம் முழுக்க இருக்கும் மாமியார் மருமகள் பிரச்சனையை தொட்டது ப்ளஸ். ரசிகர்கள் எளிதாக படத்தோடு ஒன்றி விடுகிறார்கள். அட நம் குடும்பத்தில் நடப்பது தானே என்பது ப்ளஸ்.

நதியாவின் நடிப்பு வயசானாலும் அழகாக இருக்கிறார். படம் முழுக்க ஹீரோ ஹீரோயினை விட இவர் தான் படத்தை தாங்குகிறார்.

யோகிபாபு முதல் கொஞ்சம் இரண்டாம் பாதி கொஞ்சம் என படம் தொய்வாகும் இடத்தில் வந்துவிடுகிறார். பல இடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

ஹரீஷ் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. அம்மா காதலியை சமாளிக்கும் இடத்திலும். க்ளைமாக்ஸிலும் கவர்கிறார். ஆர் ஜே விஜய் இன்னொரு ப்ளஸ் படம் முழுக்க நம் மனசாட்சி போல் இருப்பது பலம்.

குடும்ப கதை விரசமில்லாமல் அழகாக சொன்னது பலம்.

மைனஸ்

படத்தின் கதை தெரிந்த பின்னும் மிக மெதுவாக நகர்கிறது.

ஒளிப்பதிவில் இன்னும் மெருகு கூட்டியிருக்கலாம்

பாடல்கள் வெகு சுமார் ரகம் எதுவும் மனதிற்குள் ஒட்டவில்லை.

அண்டர்டேக்கர் சாமியார் போர்ஷன் படத்திற்கு தேவையே இல்லை. தவிர்த்திருக்கலாம்.

படத்தின் மேக்கிங்கில் திரைக்கதையில், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இறுதியாக..

தோனி தயாரிப்பு சதம் இல்லை ஆனால் டக் அவுட் இல்லை மிதமான ஓட்டத்தில் குடும்ப பார்வையாளர்களை கவரக்கூடிய படம்.