சந்தானம் நடிக்கும் “சக்க போடு போடு ராஜா ” – ஆடியோ ரிலீஸ் எப்போ?

0
389

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாகி இருக்கிறார் நடிகர் சந்தானம். இதே சந்தானம் நடிப்பில் `சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சந்தானம் தற்போது `சக்க போடு போடு ராஜா’, `ஓடி ஓடி உழைக்கனும்’, `மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சேதுராமன் இயக்கத்தில் உருவாகி வரும் `சக்க போடு போடு ராஜா’ படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

.மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம் .கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சியில் சமீபத்தில் படமாக்கபட்டது. அதிலும் முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார்.

  “கலக்கு மச்சா டவுளத்துள
கால வாரும் காலத்திலே
கலங்க நா கோழையில்லே “
களத்திளே இறங்கி காளபோல
ரைட்டு தாட்டு உள்ளத்திலே
வெச்சு இருக்கும் நல்ல புள்ள

STR இசை அமைக்க ரோகேஷ் பாடல் எழுத அனிருத் பாடினார் .

நவம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தை G.L.சேதுராமன் இயக்கத்தில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய படதொப்பை ஆன்டனி பணியாற்றியுள்ளார் .முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க சம்பத் ராஜ் ,ரோபோ சங்கர், சஞ்சனா சிங்,VTV கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தில் STR இசையில் ,யுவன் ஷங்கர் ராஜா ,டி.ராஜேந்தர் , உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடியுள்ளனர் .

நவம்பர் 14 தேதி சத்யம் திரை அரங்கில் பிரமாண்டமான இசை விழாவில் அனைத்து திரைஉலகினர் பங்கேற்க இனிதே நடைபெறவுள்ளதாக் அறிவிப்பு வெளியாகி உள்ளது. .