சின்ன பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு!

சின்ன பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு!

சேலத்தைச் சேர்ந்த கே.எம். ஆனந்தன் தயாரித்திருக்கும் படம் மேச்சேரி வனபத்ரகாளி. இந்தப் படம் பார்த்து 80 நாட்கள் ஆகியும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படாததால், இன்று தணிக்கை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தார் கே.எம்.ஆனந்தன் நடிகை சீதா, டெல்லிகணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்தப் படம் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டு ஒருவழியாகப் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இணையதள சேவை வழியாக சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டு அதே மாதம் 24 ஆம் தேதி தணிக்கை அதிகாரிகளால் பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின் நடந்தவற்றை ஆனந்தனே விளக்குகிறார், “ 24/08/2017 இல் என்னுடைய திரைப்படத்தை பார்த்துவிட்டு, தணிக்கை அதிகாரி மதியழகன் என்னை அழைத்து, உங்களின் திரைப்படத்தில் ஒரே ஒரு கட் கூட கிடையாது, ரெண்டே ரெண்டு மியூட் மட்டும்தான். U சான்றிதழ் என்று ஏழு நபர்கள் முன்னிலையில் தெரிவித்தார்… அதன் பிறகு பத்து நாட்கள் கழித்து அங்கே சென்ற…
Read More
பரத் நடித்த “ பொட்டு “ படத்திற்கு U/ A

பரத் நடித்த “ பொட்டு “ படத்திற்கு U/ A

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி,நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன்,பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி கேட்ட போது இயக்குநர் வடிவுடையான், “இது பரபரப்பான பேய் படமாக இருக்கும். மருத்துவ கல்லூரியின் பின்னணியில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலையில் நடைபெற்றது. ஆதிவாசிகள், பழங்குடியினர் பகுதிகளில் நடக்கும் காட்சிகளுக்காக கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரமான மலைப் பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டு பரத், நமீதா, இனியா, நிகேஷ்ராம், ஆர்யன் சமந்தப்பட்ட காட்சிகள் தொடர்ந்து பத்து நாட்கள் படமாக்கப்பட்டது. நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது. வண்டி எதுவும் போகாது. 4 கிலோ…
Read More
திரைப்பட விளம்பரத்திலும் அரசியல்! – தரமணி ராம் பேட்டி!

திரைப்பட விளம்பரத்திலும் அரசியல்! – தரமணி ராம் பேட்டி!

தமிழில் மிக முக்கியமான இரண்டு படங்களான ‘கற்றது தமிழ்’ மற்றும் ‘தங்கமீன்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராமின் 3வது படைப்பு தரமணி. முதல் படத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் நிலையும் அடுத்த படத்தில் இக்கால கல்வி முறையை பற்றியும் காட்டிய இயக்குநர் ராம், தரமணியில் உலகமயமாக்கலால் ஆண்-பெண் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். டீசர் முதல் விளம்பரம் வரை அனைத்தும் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ‘தரமணியின் வழியாக கீழடி வரை’, இயக்குநர் ராம் அளித்த பேட்டி சுருக்கமாக.. ஏன் ‘தரமணி’? வடசென்னை, தென் சென்னை பற்றி நிறைய படங்கள் வந்திருக்கு. தரமணிக்கு அந்த பக்கம் புதிய சென்னை ஒன்று இருக்கு. பன்முக கலாச்சாரம் மற்றும் பல மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி தரமணி.…
Read More
ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம்! – தரமணி வசந்த் ரவி

ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம்! – தரமணி வசந்த் ரவி

புரொடியூசர்கள் மற்றும் ஃபெப்சி தொழிலாளரகள் மோதல் போக்கால் படு சூடாகி உள்ள கோலிவுட்டை மேலும் சூடாக்குவது போல் ஆகஸ்ட் 11-ம் தேதி 'தரமணி' வெளியீடு என்று படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. அதிலும் இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளார்கள். இதனை மையமாக வைத்தே படக்குழு தொடர்ச்சியாக போஸ்டர்கள் மற்றும் டீஸர் வழியாக சாடியுள்ளது. இதனிடையே இப்படத்தின் தணிக்கையில் என்ன நடந்தது என்பது குறித்து இயக்குநர் ராம் விளக்கிய போது, “இன்றைய நவீன இளைஞனும், யுவதியும் காதலை எப்படி பார்க்கிறார்கள், காதலிக்கிறார்கள், காதலை எப்படி புரிந்து கொள்கிறார்கள், காமத்தை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இன்றைய நவீன யுவதி பற்றிய கதை என்பதால், மதுகுடிப்பவராக இருக்கும்போது அதைக் காட்டியுள்ளேன். தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் தராவிட்டாலும் கேட்டு வாங்கியிருப்பேன். காமத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் 13 வயது நிரம்பாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது இளைஞர்களுக்கான…
Read More
சர்வர் சுந்தரம் படத்தின் சென்சார் க்ளியர் – ரிலீஸ் எப்போ?

சர்வர் சுந்தரம் படத்தின் சென்சார் க்ளியர் – ரிலீஸ் எப்போ?

சின்னத் திரையில் லொள்ளு பண்ணிக் கொண்டிருந்த  நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் காமெடிய னாகி அடுத்த  ஹீரோவாகவு அறிமுகமாகி  சக்சஸ் படங்களை தந்தவர். கடந்த வருடம் வெளியான இவரது திகிலும், நகைச்சுவையும் கலந்த `தில்லுக்கு துட்டு' திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதன்பிறகு தற்போது கேனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க புதுமுக இயக்குநர் ஆனந்த பால்கி “சர்வர் சுந்தரம்” என்ற புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் சந்தானம் சமையல்காரர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். வைபவி ஷண்டில்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக அறிமுகமாகிறார். காதல், போட்டி, நகைச்சுவையுடன் சேர்ந்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் சர்வர் சுந்தரம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனச் சென்ற மாதம் வந்த டிரெய்லரைப் பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில் சர்வர் சுந்தரம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டு `U' சான்றிதழ் பெற்றிருக்கிறது என்று இயக்குநர் ஆனந்த பால்கி அறிவித்திருக்கிறார். எனவே சர்வர்…
Read More
‘தரமணி’  படத்துக்கு A  சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

‘தரமணி’ படத்துக்கு A சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

இன்று வெளியாகியுள்ள தரமணி போஸ்டர்களில், தணிக்கைக் குழுவினரை ரொம்ப லாவகமாக குத்திக் காட்டியுள்ளனர். ஆம். ’கற்றது தமிழ்’ ராம் படைத்துள்ள  தரமணி படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. காரணம் படத்தில் பெண் மதுவருந்துவது போல காட்சிகள் உள்ளதாம். இதுவரை இந்தப் படத்தை திரையுலகைச் சேர்ந்த பல விஐபிகள் பார்த்துவிட்டனர். இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, 'நானெல்லாம் ஒரு இயக்குநரே இல்லய்யா... ராம்தான் பிரமாதமான இயக்குநர். இந்தியாவிலேயே சிறந்த இயக்குநர் அவன்தான் என்பேன்," என்று பாராட்டினார். ஆனால் தணிக்கைக் குழுவோ, பெண் மதுவருந்தும் காட்சி உள்ளதாகக் கூறி ஏ சான்றுதான் தர முடியும் என்று கூற, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் இயக்குநர் ராம், "எந்தக் காட்சியையும் நீக்க முடியாது.. நீங்க கொடுக்கிறதைக் கொடுங்க," என உறுதியாக நின்றிருக்கிறார்கள். இப்போது ஏ சான்றிதழுடன்தான் வெளியாகிறது தரமணி. ஆனால் ஹீரோக்கள் சரக்கடிக்கும் காட்சிகள் கொண்ட எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு யு அல்லது…
Read More
ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு யு சர்டிபிகேட்!

ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு யு சர்டிபிகேட்!

 ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்த வரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித் துள்ளது. ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுத்ததற்காக படக்குழுவினரை தணிக்கை குழுவினர் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Read More