சர்வர் சுந்தரம் படத்தின் சென்சார் க்ளியர் – ரிலீஸ் எப்போ?

சின்னத் திரையில் லொள்ளு பண்ணிக் கொண்டிருந்த  நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் காமெடிய னாகி அடுத்த  ஹீரோவாகவு அறிமுகமாகி  சக்சஸ் படங்களை தந்தவர். கடந்த வருடம் வெளியான இவரது திகிலும், நகைச்சுவையும் கலந்த `தில்லுக்கு துட்டு’ திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதன்பிறகு தற்போது கேனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க புதுமுக இயக்குநர் ஆனந்த பால்கி “சர்வர் சுந்தரம்” என்ற புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தில் சந்தானம் சமையல்காரர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். வைபவி ஷண்டில்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக அறிமுகமாகிறார். காதல், போட்டி, நகைச்சுவையுடன் சேர்ந்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் சர்வர் சுந்தரம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனச் சென்ற மாதம் வந்த டிரெய்லரைப் பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்நிலையில் சர்வர் சுந்தரம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டு `U’ சான்றிதழ் பெற்றிருக்கிறது என்று இயக்குநர் ஆனந்த பால்கி அறிவித்திருக்கிறார். எனவே சர்வர் சுந்தரம் எந்த நேரத்திலும் வெளியாகத் தயார் நிலையில் உள்ளதாகவும், இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.