பரத் நடித்த “ பொட்டு “ படத்திற்கு U/ A

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி,நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன்,பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி கேட்ட போது இயக்குநர் வடிவுடையான், “இது பரபரப்பான பேய் படமாக இருக்கும். மருத்துவ கல்லூரியின் பின்னணியில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலையில் நடைபெற்றது. ஆதிவாசிகள், பழங்குடியினர் பகுதிகளில் நடக்கும் காட்சிகளுக்காக கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரமான மலைப் பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டு பரத், நமீதா, இனியா, நிகேஷ்ராம், ஆர்யன் சமந்தப்பட்ட காட்சிகள் தொடர்ந்து பத்து நாட்கள் படமாக்கப்பட்டது. நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது. வண்டி எதுவும் போகாது. 4 கிலோ மீட்டர் எல்லோரும், எல்லா சாதனங்களையும் நடந்தே எடுத்து சென்று படமாக்கினோம்” என்று சொல்லி இருந்தார். இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு “ U/ A “ சான்றிதழ் பெற்றுள்ளது. விரைவில் வெளியாக உள்ளது.

வசனம் – செந்தில்

ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ் இசை – அம்ரீஷ்

பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்

எடிட்டிங் – எலீசா

கலை – நித்யானந்

நடனம் – ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர் தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.