ஒரு கிராமத்து வெப் சீரிஸ்: அம்முச்சி – எப்படி இருக்கு?

0
61

 

பெண்களின் படிப்பு யாராலும் தடைபட கூடாது, அதற்கு யாருக்கு உரிமையில்லை என்பதை அடிநாதமாக வைத்து, அந்த கருத்தை விதைக்கும் நோக்கில் உருவாக்கபட்டது தான் இந்த அம்முச்சி சீரிஸ்

கதாநாயகனின் கிராமத்து காதலில், தன் பெற்றோரால் படிப்பை நிறுத்தும் சூழலில் இருக்கிறாள். இதை கேள்விப்பட்ட நாயகன் எத்தனை தடங்கல் வந்தாலும், அதை சமாளித்து தன் காதலியை படிக்க வைப்பேன் என முடிவெடுத்து அவன் சந்திக்கும் சிக்கல்கள் தான் கதை .

படத்தின் பெரிய பலமே நடிகர்கள் பட்டாளம் தான். அவர்களுடைய பேச்சு மொழி தான், இந்த தொடரை நம்மை பார்க்க வைக்கிறது. யூடுயூப்-ல் முதல் சீசன் வந்து, இரண்டாவது சீசன் ஓடிடி தளத்தில் வந்திருக்கிறது.

படத்தின் முதல் மைனஸ் ஆக தெரிவது நேர்த்தி இல்லாத மேக்கிங். படம் பல இடங்களில் ஒரு யூடுயூப் வீடியோ பார்ப்பது போல் இருக்கிறது. முழுமையாக ஆக்கபடாத சினிமாவாக தான் இந்த சீரிஸ் இருக்கிறது.

மற்றபடி கிராமத்து கதாபாதத்திரங்களின் நடிப்பும், அவர்களது வசனமும் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் தகுதியான ஒன்று தான்.

தொழில்நுட்ப ரீதியாக இந்த சீரிஸில் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். ரசிக்க வைக்கும் திரைக்கதையை சீரிஸ் ஆக திரையில் பார்க்க கூடிய வாய்ப்பை இந்த தொடர் இழந்துவிட்டது. திரைக்கதையில் இருக்கும் சுவாராஷ்யம் நமக்கு முழுதாக கடத்தப்படவில்லை.

இறுதியாக, பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய கருத்துகள் நிறைந்த சீரிஸ் தான் இது. இதில் உள்ள நடிகர்களின் நடிப்பிற்காகவும், திரைக்கதைக்காவும் நிச்சயமாக இந்த சீரிஸ்யை பார்க்கலாம்.