எப்படி இருக்கிறது சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயோன்?

ஒரு மாய மந்திரங்கள் நிறைந்த விஷ்ணு கோவிலில் உள்ள புதையலை எடுக்க ஒரு கொள்ளை கூட்டம் திட்டமிடுகிறது நாயகனும் அதில் இருக்கிறான். கடவுளை தாண்டி கொள்ளையடித்தார்களா இறுதியில் என்னவாகிறது என்பதே படம்

மாயோன்” திரைப்படத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்க, அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

இப்படத்தை N. கிஷோர் இயக்கியுள்ளார்.

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். அவரே திரைக்கதை எழுதியுள்ளார்.

ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் ஒரு கடவுள் ஆல்பத்திலிருந்து இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டது

K.S. ரவிக்குமார், ராதா ரவி, பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மாயோன் திரைப்படம் கருத்தாக்கம்:

ஹீரோ சிபிராஜ் கே.எஸ்.ரவிகுமாரால் அனுப்பப்பட்ட திறமையான நுண்ணறிவுள்ள நம் பாரம்பரியத்தை காக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்
இவர்குழுவில் தான்யரவிச்சந்திரன் ,பகவதி பெருமாள் இன்னும் சிலர் இருக்கின்றனர் .இவர்கள் 5000 ஆண்டுகள் பழமையான மாயோன் மலையில் உள்ள கிருஷ்ணன் கோயில் முழுவதும் நிரம்பியிருக்கும் ரகசியத்தை அதாவது நம் முன்னோர்களின் நுட்பமான திறமையை கண்டுபிடித்து படம் பார்ப்பவர்களை சின்னதாக பிரமிக்க வைக்கிறார்கள் கூடவே கோவில் தங்கத்தை காப்பாற்றி வில்லன்களை பிடித்து கொடுக்கிறார் சிபி . இந்தப்படத்தின் இயக்குனர் என் .கிஷோர் திரில்லான காட்சிகளை படம் முழுவதும் வைத்து சிபிராஜ் உள்பட எல்லோரையும் சரியாக நடிக்கவைத்திருக்கிறார் அதே சமயம் தொய்வான ஷாட்களை நீக்கி விறு விறுப்பை கூட்டியிருக்கலாம்.

இசைஞானியின் இசை ஆழ்மனது வரை ஒலிக்கிறது.
5000 வருடங்களுக்கு முன்பே கட்டிடக்கலையில் சூப்பர் என்ஜினீர்களாக இருந்த நம் முன்னோர் பரம்பரையில் வந்த நம்மால் மலேசியா ,அமெரிக்கா போன்று ட்வின் டவர்களையோ ,துபாய் புர்ஜ் கலிஃபா டவர் போல கட்டி அடுத்த தலைமுறையை ஆச்சர்ய பட வைக்கமுடிய வில்லை என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது

படத்தின் முக்கியமான சறுக்கல்களில் ஒன்று திரைக்கதை. ஒரு கோயிலை வைத்து கொண்டு முழு கதையும் நகர்கிறது என்று இருக்கும் போது, அதை சுற்றி அமைக்கப்படும் திரைக்கதை தான் படத்திற்கு பலம் சேர்க்கும்.திரைக்கதை படு மோசமாக அமைக்கப்பட்டதே, படத்தை தொய்வாக இழுத்து சென்றது. இதுபோன்ற பாண்டஸி படங்களில் சிஜி முக்கியபங்கு வகிக்கும். அப்படிப்பட்ட நிலையின் படத்தின் சிஜியை சிறப்பாக அமைத்திருக்கலாம்.

மொத்தத்தில் சின்ன தவறுகளை சரிசெய்து, திரைக்கதையில் ஆர்வம் செலுத்தி இருந்தால், படம் சிறப்பாக உருவாகி இருக்கும்.