தமிழின் முதல் அமேசான் ஒரிஜினல் சிரிஸ் எப்படி இருக்கிறது! – சுழல் விமர்சனம்

 

எழுத்து மற்றும் உருவாக்கம்: புஷ்கர் காயத்ரி

இயக்கம் : பிரம்மா – அனுசரன்
நடிகர்கள்: கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ்

முதல் தமிழ் அமேசான் ஒரிஜினாலாக வந்திருக்கிறது இந்த சுழல்.

ஒரு கிராமத்தில் இருக்கும் சிமெண்ட் பாக்டரி பற்றி எரிகிறது. அதே நேரத்தில் அந்த பாக்டரி யூனியன் லீடர் மகள் காணாமல் போகிறாள். இந்த இரண்டையும் யார் செய்தது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என விசாரிப்பதே கதை.

இந்த தொடரின் பலமே திரைக்கதை தான். மொத்தம் எட்டு எபிசோடுகளுக்கு எழுதப்பட்ட திரைக்கதை தேவையில்லாத பாதையில் பயணிக்காமல், கதையை ஒட்டியே பயணிக்கிறது.

காணமல் போன ஒரு பெண்ணை கண்டுபிடிக்கும் வழக்காக ஆரம்பித்து, கதை நாம் யூகிக்காத பல இடங்களுக்கு பயணிக்கிறது. இது பார்ப்பவர்களை சீட் நுனிக்கு வரவைக்கிறது.  படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு ஒவ்வொன்றும் ஆழமாக உள்ளது. வெப்சீரிஸ்களில் ஒரு கதாபாத்திர வடிவமைப்பு என்பது ஒரு இடத்தில் ஆரம்பித்து ஒரு மாற்றத்திற்கு வந்து அடைய வேண்டும். அந்த வகையில் தொடரில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கதாபாத்திரத்தும் ஆரம்பத்தில் ஒரு வடிவத்தையும், முடியும் போது வேறு ஒரு பரிணாமத்தையும் நமக்கு காட்டுகிறது.

 

இந்த தொடர் எழுத்தாளர்கள் எழுத்து அப்படியே வர முக்கியமான காரணம் படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் தான். குறிப்பாக கதிர் உடைய கதாபாத்திரம் அவரது திரைபயணத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும். அவர் அதற்குண்டான சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் ஸ்ரேயா ரெட்டி, நிலா மற்றும் அதிசியம் ஆக நடித்த இருவர், என நம்மை ஆச்சர்யபடுத்தும் பலர் இந்த சீரிஸ்-ல் இருக்கிறார்கள்.

 

இயக்குனர் பிரம்மா மற்றும் அனுசரண் இந்த சீரிஸ்-க்கு பொறுத்தமான இயக்குனர்கள் என நிரூபித்து இருக்கிறார்கள். இந்த தொடரில் முதல் நான்கு எபிசோடுகள் காணாமல் போன பெண்ணுகு என்ன ஆச்சு எனபயணிக்கிறது. அடுத்த நான்கு எபிசோடு அந்த பெண் காணாமல் போனதற்கு யார் காரணம் என இருவிதமாக பயணிக்கிறது. இதை இந்த இரண்டு இயக்குனர்களுக்கு பிரித்து கொடுத்தது சிறப்பான காரியம். ஏனென்றால் இந்த இரண்டையும் சிறப்பாக இருவரும் உருவாக்கி, அதை சரியாக கோர்த்துள்ளனர். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கிய தொடர் போல் இல்லாமல், எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது சீரிஸ்.

தமிழிலும் ஹாலிவுட் தரத்தில் வெவ்சீரிஸ் எடுக்கலாம் என உத்வேகம் கொடுத்திருக்கிறது சுழல். கண்டிப்பாக தமிழின் சிறந்த வெப்சீரிஸ்களில் ஒன்றாக சுழல் இருக்கும்.