போர் தொழில் – திரை விமர்சனம் !!

போர் தொழில்

இயக்கம் – விக்னேஷ் ராஜா

நடிகர்கள் – சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல்.

இசை – ஜேக்ஸ் பிஜாய்

சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் திரில்லர் படம். ஹாலிவுட் கனகச்சிதமாக எடுக்கப்படும் இந்த ஜானர் தமிழுக்கு மட்டும் ஏனோ செட்டாவதில்லை. எப்போதாவது அரிதாக ஒரு நல்ல திரில்லர் படம் வரும். ராட்சசன் மாதிரி விதிவிலக்கான படமாக மிரட்டலாக வந்திருக்கிறது போர் தொழில்.

திடீரென திருச்சி அருகில் இளம்பெண்கள் கொடூரமாக ஒரே முறையில் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். அந்த கொலையை கண்டுபிடிக்க சரத்குமார் நியமிக்கப்படுகிறார். புதிதாக பணிக்கு சேரும் அசோக்செல்வனை டிரெய்ன் செய்ய சொல்லி அவருடன் அனுப்புகிறார்கள். இருவரும் அந்த குற்றவாளியை கண்டுபிடித்தார்களா என்பதே படம்.

இந்த மாதிரி சைக்கோ கொலை படங்களுக்கு திரைக்கதை ரொம்ப முக்கியம். கொலை விசாரணையை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி ரசிகனை கூட இழுத்து சென்று, இறுதியில் நாம் எதிர்பாராத திருப்பத்தை தர வேண்டும். அதை அட்டகாசமாக நிறைவேற்றியிருக்கிறது இந்தப்படம்.

முக்கியமாக திரைக்கதை கொலை குற்றவாளி என்பதாக மட்டுமே செல்லாமல் சரத்குமார் பாத்திரம் அவரோடு ஒட்ட முடியாத அசோக் செல்வன், இருவருக்குமான கெமிஸ்ட்ரி, கொலையாளி பாத்திரம் என ஒவ்வொரு பாத்திரத்தையும் திரைக்கதையோடு அற்புதமாக எழுதியிருக்கிறார்கள் ஆல்ஃபிரட் பிரகாஷ் விக்னேஷ் ராஜா.

முதல் பட இயக்குநர் என்றே சொல்ல முடியவில்லை, தனியாக பாடல் இல்லை, ரொமான்ஸ் இல்லை, ஆனால் இருக்கை நுனியில் நம்மை உட்கார வைத்திருக்கிறார் விகேனேஷ். ஒவ்வொரு ஷாட்டிலும் அவரது திறமை பளிச்சிடுகிறது.

அசோக்செல்வன் ஒவ்வொரு படத்திலும் 16 அடி பாய்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அதற்கான மெனக்கெடல் வாழ்த்துக்கள். படத்தில் அனைவரையுன் தன் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு கம்பேக் கொடுத்திருக்கிறார் சரத்குமார். ஒளிப்பதிவும் இசையும் நமக்குள் ஒரு திரில் அனுபவத்தை கொண்டு வந்துவிடுகிறது.

கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரில்லர் படம் போர் தொ