ராயர் பரம்பரை வழிமொழியப்படுமா! இல்லை.. ஆமோதிக்க படுமா?!

ராயர் பரம்பரை வழிமொழியப்படுமா! இல்லை.. ஆமோதிக்க படுமா?!

ராயர் பரம்பரை திரை விமர்சனம் இயக்கம் - ராம்நாத் நடிகர்கள் - கிருஷ்ணா, ஆனந்தராஜ், மொடை ராஜேந்தர் இசை - ராகவேந்திரா தயாரிப்பு - சின்னசாமி மௌனகுரு ஒரு கிராமத்தில் காதலர்களுக்கு எதிராக ஒருவர் சங்கம் நடத்தி வருகிறார் , அதில் கதாநாயகன் கிருஷ்ணா உறுப்பினராக இணைகிறார். அதே ஊரில் தாதாவாக இருக்கிறார் ஆனந்த்ராஜ் அவரது மகளை நிச்சய திருமணம் தான் செய்ய வேண்டும் என்று குறிக்கோளோடு இருக்கிறார், ஆனால் அதை மீறி கதாநாயகன் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறான், இறுதியில் காதலர்கள் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை. காதல் எதிர்ப்பு சங்கத்திற்கு தலைவராக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார். இவர்கள் காதலிப்பவர்களை கண்டால் அவர்களை பிரித்து விடுகிறார்கள். அதே ஊரில் தாதாவாக இருக்கிறார் ஆனந்த்ராஜ். இவர் தன் மகள் சரண்யாவிற்கு தான் பார்க்கும் இளைஞனைத் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், ஜோசியக்காரர்…
Read More
பம்பர் லாட்டரி பரிசு அடித்ததா ?

பம்பர் லாட்டரி பரிசு அடித்ததா ?

பம்பர் திரை விமர்சனம் இயக்கம் - செல்வகுமார் நடிப்பு - வெற்றி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி. ஊதாரி, ஒன்றுக்கும் ஆகாதவன் திருடன் என தூற்றப்படும் ஒருவனுக்கு பம்பர் லாட்டரி அடிக்கிறது. தான் கஷ்டத்தில் இருந்தாலும் அதை அவனை தேடி வந்து தருகிறான் நேர்மை மாறா கிழவன். பணம் வருகிறது என்றவுடம் அவனைச் சுற்றி இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் பணம் மனித மனங்களில் என்னவெல்லாம் செய்கிறது என்பதே இந்தப்படம். தொடர்ந்து திரில்லர் படங்களாக நடித்து நம்மை சோதித்த நாயகன் வெற்றி உண்மையில் நல்ல கதையில் எல்லோரும் தயங்கும் கதாப்பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு அசத்தியிருக்கிறார். அவருக்கு இது பேர் சொல்லும் வெற்றிப்படம். ஒரு சிம்பிளான வாழ்க்கை கதை அதற்கு தகுந்த பரபர திரைக்கதை என்ன நடக்கும் என்பது தெரிந்தே இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் ஈர்த்து விட்டார்கள். அங்கங்கே பட்ஜெட்டும் நடிகர்களின் ஓவர் நடிப்பும் கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் ஒரு…
Read More
கதவை திறந்தால் பேய் வரும் ஆனால் பயம் வந்ததா? INSIDIOUS: THE RED DOOR விமர்சனம்

கதவை திறந்தால் பேய் வரும் ஆனால் பயம் வந்ததா? INSIDIOUS: THE RED DOOR விமர்சனம்

  இயக்கம் - Patrick Wilson திரைக்கதை - Scott Teems கதை - Leigh Whannell and Scott Teems based on characters created by Leigh Whannell. அமெரிக்காவில் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பம்பர் ஹிட்டடித்த படம் தான் இன்ஸிடியஸ். தொடர்ந்து நான்கு பாகங்கள் வந்து ஹிட்டடித்த நிலையில் இப்போது 5 ஆம் பாகம் வந்துள்ளது. லேம்பர்ட் குடும்பத்தின் அத்தனை நட்சத்திரங்களும் இறுதியாக ஒருமுறை இந்தப்படத்திற்காக வந்துள்ளனர். இந்தப் படத்தொடரின் ஐந்தாவதும் கடைசியுமான இப்படம், இரண்டாவது பாகமான ‘இன்ஸிடியஸ்: சாப்டர் 2’ படத்தின் தொடர்ச்சியாகத் தொடங்குகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு, மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்கிய நிலையில், ஜோஷ் லேம்பர்ட் (பேட்ரிக் வில்சன்), தன் மகன் டால்டன் லேம்பர்டை (டை சிம்ப்கின்ஸ்), பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் விட்டுவருகிறார். அங்கு மகனுக்கு ஓவியங்கள் மூலம் விநோதமான நிகழ்வுகள் நிகழ்கிறது. தந்தைக்கும் அதே மாதிரி நிகழ்கிறது இருவரும் தப்பித்தார்களா? குடும்பம் இணைந்ததா…
Read More
மாமன்னன் -என் பார்வை!

மாமன்னன் -என் பார்வை!

பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜின் உட்சம் மீண்டும் அதை அடைவது என்பது கடினம். மிக சுமாரான படம். பல நல்ல தருணங்களும் மிகச்சிறந்த மேக்கிங்கும், அட்டகாசமான இசையும் படத்தின் பலம். பலவீனமான கதை இரண்டாம் பாதியின் திரைக்கதை இந்தப்படத்தின் பெரும் பிரச்சனை. மாரி செல்வராஜுக்கு திரைமொழி மிக அழகாக வருகிறது. மிகப்பெரும் உணர்வுகளை மிக சில மாண்டேஜ் மூலமாக காட்டிவிடுகிறார். உதாரணம் உதயநிதி கீர்த்தி சுரேஷ் காதல் எபிஸோட் 4 நிமிட பாடல், மாண்டேஜ் மூலம் அது நம் மனதில் மிக ஆழமாக பதிகிறது. விடுதலை படத்தில் வெற்றி மிஸ் செய்தது இது தான்.ஆனால் அதே மாண்டேஜ் பிரச்சனையாகவும் இருக்கிறது மாமன்னன் யார் அவர் அவருடைய இனத்திற்கு என்ன செய்தார் எல்லாம் கரையிலேயே இல்லை வடிவேலுவை வைத்து வரும் மாண்டேஜ்கள் எதுவும் எடுபடவில்லை. 48 ஃப்ரேம் சில காட்சிகளில் கதாபாத்திரத்தின் உணர்வை நாம் நெருக்கமாக உணர காட்டப்படும் திரை மொழி ஆனால்…
Read More
பாயும் ஒளி நீ எனக்கு எவ்வளவு தூரம் பாய்ந்தது!

பாயும் ஒளி நீ எனக்கு எவ்வளவு தூரம் பாய்ந்தது!

பாயும் ஒளி நீ எனக்கு திரை விமர்சனம் இயக்கம் - கார்த்திக் அத்வைத் நடிப்பு - விக்ரம் பிரபு, வாணிபோஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா இசை-மஹதி ஸ்வர சாகர் ஒளிப்பதிவு - ஸ்ரீதர்   நண்பருடன் இணைந்து நெட்வொர்க் தொடர்பான சிறிய நிறுவனம் நடத்தி வரும் கதாநாயகனுக்கு பார்வை குறைபாடு பிரச்சினை உள்ளது. இப்படியான நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்யும் ரவுடிகளிடமிருந்து ஒரு பெண்ணை காக்கிறார். இதன் விளைவாக ரவுடிகள் கூட்டம் அவரை பழிவாங்க முற்படுகிறது. மறுபுறம் விக்ரம் பிரபு சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். தன்னுடைய கண் பார்வை பிரச்சினைக்கு மத்தியில் எதிரிகளை கண்டுபிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதி கதை விக்ரம் பிரபுவின் நடிப்பு இந்தப் படத்தை பெரிதும் தாங்கி நிற்கிறது .பார்வை குறைபாடால் அவதிப்படும் விக்ரம் பிரபு, சத்தத்தை வைத்து தன்னை தாக்க வருபவர்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். வேல ராமமூர்த்தி, வாணி போஜன்…
Read More
தலைநகரம் 2 முதல் பாகத்தை மிஞ்சியதா !!

தலைநகரம் 2 முதல் பாகத்தை மிஞ்சியதா !!

  இயக்கம் - Vz துரை நடிப்பு - சுந்தர் சி, பாலக் லல்வாணி, தம்பி ராமையா. தலைநகரம் முதல் பாகம் தான் சுந்தர் சியை ஹீரோவாக்கியது. வடிவேலு காமெடியுடன் இணைந்து ரௌடியின் வாழ்க்கையை கமர்ஷியலாக சொல்லி வெற்றி பெற்றது படம். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்போது அதன் இரண்டாம் பாகம். நேரடியாக எந்த தொடர்பும் இல்லாமல் புது கதையுடன் வந்துள்ளது இந்தப்படம். சிட்டிக்குள் ரௌடியிசம் பண்ணும் ஒருத்தன், ஹார்பரில் ரௌடியிசம் பண்ணும் ஒருத்தன், சினிமா துறையில் ரௌடியிசம் பண்ணும் ஒருத்தன், இவர்களுக்கு மூவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ஒருவரை ஒருவர் அழிக்க நினைக்கிறார்கள். இவர்கள் பிரச்சனையில் ரௌடியிசம் வேண்டாமென ஒதுங்கி இருக்கும் ரைட் உள்ளே வர நேர்கிறது. பின் என்ன நடக்கிறது என்பதே படம். முதல் பாதி ஒவ்வொரு வில்லனுக்கும் ஒரு ப்ளாஷ்பேக், ரைட்டின் கதை அவர்கள் பிரச்சனையில் உள்ளே வருவது என திரைக்கதை பரபரக்கிறது, ஒவ்வொரு…
Read More
அழகிய கண்ணே திரை விமர்சனம்

அழகிய கண்ணே திரை விமர்சனம்

  இயக்குனர் - விஜயகுமார் நடிகர்கள் - விஜய் சேதுபதி, லியோ சிவக்குமார் , சஞ்சிதா ஷெட்டி தயாரிப்பு - எஸ்தெல் எண்டர்டெயினர் ஒரு கிராமத்தில் சமூக போராளியாக இருக்கும் கதையின் நாயகன் இன்பா சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்பது இவரின் கனவாக உள்ளது. அதற்காக பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிக்கு சேர சில முயற்சிகளை செய்கிறார் , இவருக்கு இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேருவதற்கு வாய்ப்பும் கிடைக்கிறது. இதற்கிடையில் மேல்ஜாதி பெண்ணை காதலிக்கவும் செய்கிறார் , சென்னை சென்று உதவி இயக்குனர் ஆன பிறகு சில காரணங்களால் நாயகியை திருமணமும் செய்துவிடுகிறார், பிறகு இவருக்கு குழந்தையும் பிறக்கிறது, கடைசியில் இவர் நினைத்தபடி இயக்குனர் ஆனாரா ? இல்லையா ? என்பதே மீதி கதை… இந்த கதையினை இயக்குனர் சீனு ராமசாமியின் தம்பி அறிமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கியுள்ளார். இந்த்ப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ…
Read More
பானி பூரி இனிப்பா இல்லை கசப்பா!

பானி பூரி இனிப்பா இல்லை கசப்பா!

பானி பூரி இணைய தொடர் விமர்சனம் !!   தயாரிப்பு: ஃபுல் ஹவுஸ் என்டர்டெய்ன்மென்ட் நடிகர்கள்: லிங்கா, ஷம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர் மற்றும் பலர் இயக்கம்: பாலாஜி வேணுகோபால் ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் பெயரில் புதிதாக ஆரம்பமாகியிருக்கும் டிஜிட்டல் தளத்தில் ஜூன் 20 ஆம் தேதி முதல் வெளியாகியிருக்கும் இணையத் தொடர் 'பானி பூரி'. தற்போது வரவர ஓடிடியில் வரும் வெப் சீரிஸ்கள் அடல்ட் படுக்கையறை காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களோடு வர ஆரம்பித்து விட்டது அதில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது பானி பூரி   காதலன் லிங்காவும், காதலி ஷம்பிகாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஷம்பிகா தோழி காதலில் தோற்க, ஆண்களை வெறுத்து ப்ரேக்கப் செய்கிறார் ஷம்பிகா. தன் காதலியை அடைய அவரை தேடி அவர் வீட்டுக்கே செல்கிறார் லிங்கா . ஷம்பிகாவின் தந்தையான இளங்கோ.., 'இருவரும் ஒரு வீட்டில் ஒரு வாரம் ஒன்றிணைந்து…
Read More
அஸ்வின்ஸ் படம் வசந்த்ரவிக்கு ஹாட்ரிக் வெற்றி தருமா!

அஸ்வின்ஸ் படம் வசந்த்ரவிக்கு ஹாட்ரிக் வெற்றி தருமா!

அஸ்வின்ஸ் திரை விமர்சனம் :   இயக்குனர் - தருண் தேஜா மல்லரெட்டி நடிகர்கள் - வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன் இசை - விஜய் சித்தார்த் தயாரிப்பு - பாபிநீடு     கதாநாயகன் மற்றும் அவர்களது குழு பேய் இருப்பதாக நம்பப்படும் மாளிகைக்கு சென்று இரவில் அங்கு தங்கி நடப்பவைகளை யூடியூப்பில் பதிவு செய்யும் வேலை செய்கின்றனர், ஒரு நாள் அவர்களுக்கு வெளி நாட்டில் ஒரு மாளிகையை ஒலிப்பதிவு செய்து படம் பிடிக்குமாறு அழைப்பு வருகிறது. ஐந்து நபர்கள் கொண்ட குழு அந்த மாளிகைக்கு செல்கின்றனர் , அங்கு ஒரு அமானுசிய சக்தியிடம் மாட்டிகொள்கின்றனர், இதன் பின் அங்கிருந்து தப்பித்தார்களா என்பதே மீதிக்கதை.   இந்தப் படத்தில் தரமணி மற்றும் ராக்கி பட புகழ் வசந்த்ரவி கதாநாயகனாக நடித்திருக்கிறார், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விமலா ராமன் நடித்துள்ளார்.   சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த…
Read More
தண்டட்டி திரை விமர்சனம்

தண்டட்டி திரை விமர்சனம்

  பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, தீபா சங்கர், செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா நடிப்பில் ராம் சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி உள்ள படம் தண்டட்டி. தண்டட்டி என்பது, கிரமாத்து வயதான பெண்கள், காது வளர்க்க அணியும் தங்க ஆபரணம். தற்போது வழக்கொழிந்து வரும் இந்த தண்டட்டியின் பின்னால் ஒரு அழகிய கதையை கிரமாத்து வாழ்வியலை கண்முன் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் ஒய்வு பெற வேண்டிய வயதில், ஒரு குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால்  மனித உரிமை அமைப்பின் விசாரணைக்கு ஆளாகி மாற்றல் வாங்கி புதிய பகுதிக்கு வந்திருக்கும் காவலர் (பசுபதி). அருகே இருக்கும் பிரச்சனைக்குரிய கிராமத்தில் யாருக்கு பிரச்சனை என்றாலும் போலீஸ் போகாது, ஆனால் அங்கே இருந்து தன் அம்மாவை காணவில்லை என மூன்று பெண்களும் பேரனும் வருகிறார்கள். இறந்து போன அவரை கண்டுபிடிக்கும்…
Read More