காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் சொல்ல வந்தது என்ன!!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

இயக்கம் – முத்தையா
நடிகர்கள்ஆர்யா, சித்தி இத்னானி

இசை – ஜி வி பிரகாஷ் குமார்

இந்தப்படத்தின் கதையை எப்படி சொல்வது என்று யோசித்தாலே தலை சுற்றுகிறது. முத்தையாவுக்கு என்று ஒரு ஆடியன்ஸ் இருக்கிறார்கள் அந்த ரசிகர்களுக்கென வழக்கமான ஆக்சன் மாசாலாவை அரைத்து, ஜாதிமதம் சேர்த்து, நாயக பிம்பத்துடன் இப்போதும் பந்தி பரிமாறியிருக்கிறார்.

நாயகியின் சொத்துக்காக நாயகியை அடைய நினைக்கும் அவளின் அண்ணண் மனைவி குடும்பம் அவர்களிடமிருந்து காப்பாற்ற வருகிறார் நாயகன். நாயகன் உண்மையில் அவரின் மாமன் மகன் அது எப்படி? நாயகியை காப்பாற்ற நினைக்கும் நேரத்தில் அவரை கொல்ல நினைக்கும் அடுத்த வில்லன் அவன் கதை என்ன ?

படம் முழுக்க 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பெரிய ஃபைட் நடக்கிறது ஃபைட் முடிந்ததும் யாராவது ஃப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அது முடிந்தவுடன் அடுத்த ஃபைட். ஒரு வழியாக நம்மை அடித்து அனுப்புகிறார்கள்.

படத்திற்குள் Flashback இல்லை Flashback ல் தான் படம். ஒரு பத்து பதினைந்து வில்லன்கள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிதனித்தனி Flashback. பாக்யராஜுக்கு ரெண்டு Flashback. ஆர்யாவுக்கு ஒண்ணு ஹீரோயினுக்கு ஒண்ணு. அப்பாட என்றாகிவிடுகிறது. மொத்த சண்டைக்காட்சிகளை எடுத்துவிட்டால் படம் அரை மணி நேரம் மட்டுமே ஓடும் போல.

Kathar Basha Endra Muthuramalingam Photos & Images # 27765 - Filmibeat Tamil

ஆர்யா முதன் முதலாக கிராமத்து ரோலில் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் அவரை விட நாயகி சித்தி இத்னானிக்கு தான் வாய்ப்பு. வெயிட்டான ரோல் நன்றாகவே செய்துள்ளார். இருவரை தவிர பிரபு சில இடங்களில் தெரிகிறார். மற்றவர்களெல்லாம் ஆர்யாவிடம் அடி வாங்க மட்டுமே வருகிறார்கள்.

மியூசிக், ஒலிப்பதிவு வழக்கமான முத்தையா படம் போலவே. ஜீவி பாடல்களில் கவர்கிறார்.

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பெயரை போலவே பெரிய இழுவை. முத்தையா ரசிகர்கள் ரசிக்கலாம்.