டக்கர் படம் சித்தார்த்தின் திருப்பு முனை படமாக இருக்குமா?

டக்கர் திரை விமர்சனம்

இயக்குனர் – கார்த்திக் ஜி. க்ரிஷ்
நடிகர்க்ள் -சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக்
இசை – நிவாஸ் பிரசன்னா
தயாரிப்பு – சுதன் சுந்தரம்

ரொமான்ஸ் காமெடியில் இளைஞர்களுக்கான படமாக எடுக்க நினைத்த படம்.

இந்த கால இளைஞர்களை போல சம்பாதித்து பணக்காரன் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வருகிறான் ஒருவன் . பல்வேறு இடங்களில் வேலை செய்கிறான். ஆனால் சுயமரியாதை மற்றும் தன்மானத்தோடு வேலை செய்ய வேண்டும் என நினைப்பதால் எங்குமே நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பின் ஒரு வழியாக கேப் டிரைவராகிறான். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பணம் தான் காரணம் என நினைப்பவர் லக்கி (கதாநாயகி) . ஒரு கட்டத்தில் சந்திக்கும் சித்தார்த், திவ்யான்ஷாவின் வாழ்க்கை பணம், பதவி உள்ளிட்டவைகளால் ஏற்படும் பிரச்சனைகளை தாண்டி எப்படி சிறப்பாக இருக்கிறது என்பதே கதை

மொத்த படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் சித்தார்த் பணம் மற்றும் வாழ்க்கை பற்றி மாறுபட்ட கருத்துகள் கொண்ட இரண்டு பேரை இயக்குநர் காட்டிய விதம் ரொம்ப சுவராஸ்யமாக இருக்கிறது. ஆனால் திரைக்கதை வலுவாக இல்லை. ஒரே நேரத்தில் பல விஷயங்கள் நடக்கிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்தையும் செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனால் அது பெரிதும் உதவவில்லை, படம் எந்த திசையில் பயணிக்கிறது என் புரிந்துகொள்ள முடியவில்லை.

சமூக விரோத செயல்களில் ஈடுபட்டும் பணம் சம்பாதிக்கும் கும்பல் பணத்திற்காக இளம் பெண்களை கடத்தி விற்பனை செய்கிறது. இந்நிலையில் அந்த கும்பலின் களத்தில் நாயகனும் இணைய நேர்கிறது . அதன் மூலம் அவருக்கு பல லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இன்னிலையில் அவரின் கார் சேதம் அடைகிறது. இதனால் சித்தார்த்தின் வேலைக்கு பிரச்சனை ஏற்படுகிறது.வாழ்க்கை முடிந்துவிட்டது என சித்தார்த் நினைக்கும்போது பயங்கர பணக்கார பெண்ணான லக்கியை( திவ்யான்ஷா கௌஷிக்) சந்திக்கிறார். அதன் பொன் நடக்கும் சம்பவங்களை காமெடி கலந்து சொல்லியுள்ளார்கள். இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை.

Takkar Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos | eTimes

யோகிபாபுவின் ஒன்லைனர்கள் அனைத்து இடங்களிலும் கை கொடுக்கவில்லை. டிரெய்லரில் காட்டியபடி திவ்யான்ஷா கௌஷிக்கிற்கு நடிக்க பெரிதாக ஸ்கோப் இல்லை.ஆனால் நிவாஸ் பிரசன்னாவின் இசை நன்றாக இருக்கிறது.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று படத்தை பார்த்தால் ஒரளவிற்கு உங்களை என்டர்டெயின்மென்ட் செய்யும் ஒரு படம். படம் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது தெரிகிறது. சீக்கிரமாக வந்திருந்தால், படம் இன்னும் கொஞ்சம் ஃபிரஷ்ஷாக இருந்திருக்கும்.

டக்கர் பெரிதாக ஈர்க்கவில்லை.