*ஃபாஸ்ட் X* திரை விமர்சனம் ! 

0
20

 

உலகம் முழுக்க பயங்கரமான ஃபேன் பாலோயிங் உள்ள தி ஃபாஸ்ட் & தி ஃப்யூரியஸ்’ படத்தொடரின் 10 வது பாகம்

 

மாரவல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு, இணையாக  உலகம் முழுக்க இருக்கும் டாப் ஹீரோக்களை இணைத்து ஒரு வெற்றிகரமான படத்தொடர். கார் சேஸாக ஆரம்பித்த முதல் பாகம் உலகை காக்கும் சூப்பர் ஹீரோக்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது

 

 

பிரபலமான ‘தி ஃபாஸ்ட் & தி ஃப்யூரியஸ்’, 2001 இல் தொடங்கி, இதுவரை 9 படங்கள் வெளியாகியுள்ளன.  தற்போது வெளியாகவுள்ள 10ஆவது படமான ஃபாஸ்ட் X, 2021 இல் வெளிவந்த F9 படத்தின் தொடர்ச்சியாக வெளியாகிறது. லண்டன், ரோம், டூரின், லிஸ்பன், லாஸ் ஏஞ்சல்ஸ் என உலகம் முழுக்க படமாக்க்கிருக்காங்

20 வருடங்கள் ஆகியும், இவ்வரிசை படங்களுக்கான  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்தபடியே தான் இருக்கிறது.

 

முதல்ல இந்த பாகத்தோட

*கதைச்சுருக்கம்* பார்த்திடலாம், Dominic Toretto (Vin Diesel) மற்றும் அவரது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து எதிரிகளை அழிச்சிட்டு, நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கிறப்ப,   Dante ங்கிற வில்லன் வர்றாரு.  Dante பாத்திரத்தில் Aquaman புகழ் Jason Momoa நடிச்சிருக்கார். தனது  தந்தையான போதைப்பொருள் அதிபர் Hernan Reyes -இன் (Joaquim de Almedia from Fast 5 in 2011) மரணத்திற்குப் பழிவாங்க டாமோட குடும்பத்த நண்பர்கள மொத்தமா ஆழிக்க திட்டம் போடுறாரு. அவரோட முதல் இலக்கு  டொமினிக்கின் 8 வயது மகன் (Leo Abelo Perry). டான் தன்னோட குடுமபத்த காப்பாத்தினாரா என்பதே படம்.

 

தி ஃபாஸ்ட் & தி ஃப்யூரியஸ்’,  படங்களோட ஸ்பெஷல் கார் ரேஸ், ஆக்சன் சீன்ஸ். இந்தப்படத்துலயும் அதுக்கு வஞ்சனை இல்லாம செஞ்சிருக்காங்க. படத்தோட முதல் 10 நிமிஷத்துல வர்ற ரோம்ல நடக்குற பாம் சீக்குவன்ஸ் பிரமிக்க வைக்குது. எப்படி இத படமாக்கினாங்க? எத்தனை கார், எவ்வளவு பெரிய சேஸ், . படம் முழுக்க இந்த ஆக்சன் வந்துட்டே இருக்கிறது செம்ம பலம். படத்தில ஹாலிவுட்ல இருக்கு டாப் ஹீரோக்கள் எல்லாரும் வர்றாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆக்சன் சீன் வேற வருது

 

டாமா விண்ட் டீசல் கலக்கிருக்காரு. அவர தவிர வில்லனா வர்ற ஜேசன் மேமோ பின்னியிருக்கிறார். அவரோட மேனரிசம், அவரோட ஜோக்ஸ் டயாலாக் எல்லாமெ செம்மயா செட் ஆகியிருக்கு

ஒளிப்பதிவு படத்தோட பிரமாண்டத்த கண்முன்னாடி  கொண்டு வந்து விருந்து வச்சிருக்கு.  அடுத்த பாகத்துக்கும் இப்பவே லீட் கொடுத்திருக்காங்க

ஆக்சன் விரும்பிகள் தவற விடக்கூடாத படம். . . .   க க, . . த படம்.