விமானம் திரை விமர்சனம்
இயக்குனர் – சிவ பிரசாத் யனலா
நடிகர்கள் – சமுத்திரக்கனி , மாஸ்டர் துருவன்
இசை – சரண் அர்ஜுன்
தயாரிப்பு – கிரண் கொர்ராபட்டி கிரியேடிவ் ஒர்க்ஸ் & ஜீ ஸ்டுடியோஸ்
மகனின் ஆசையை நிறைவேற்ற போராடும் அப்பாவின் கதை.
ஒரு கால் ஊனமுற்ற அப்பாவான வீரய்யா தன் மகனை தனி ஆளாக வளர்க்கிறார், வீரய்யாவுக்கு தன மகன் ராஜூவை நன்றாக படிக்கவைத்து பெரிய ஆளாக ஆக்கவேண்டும் என்பதற்க்காக கஷ்டப்பட்டு ராஜூவை வளர்க்கிறார், ராஜுவுக்கு விமானத்தின் மீது ஒரு பிரமிப்பான ஆசை இருக்கிறது.சிறுவயதிலிருந்தே விமானத்தில் சென்றாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ராஜு எப்போதும் விமானம் பற்றின நினைப்பிலே இருக்கிறான். ராஜூவை விமானத்தில் கூட்டிசெல்வதற்கு முயற்சிக்கும் அப்பா வீரய்யா அதற்கான பணத்தை திரட்டி மகன் ராஜூவை விமானத்தில் கூட்டி சென்றாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் கதை.
முதல் பாதி தேவையற்ற காட்சிகள் இருந்தாலும் இரண்டாவது பாதி ஒரு சிறந்த எமோஷனலை தருகிறது. ஒரு உடல் ஊனமுற்ற விளிம்பு நிலையில் உள்ள தந்தையாக வாழ்ந்துளார் சமுத்திரக்கனி. சிறுவன் துருவன் ஒரு அழகான நடிப்பை இயல்பாக தந்துள்ளான். விமானத்தை பார்த்து துள்ளி குதிக்கும் காட்சியில் நாமும் குழந்தைகளாகி விடுகிறோம். கதைக்கரு நம்மிடம் எளிதாக ஒட்டிக் கொள்வது போல இருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது, மேலும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரத்திற்கும் நடிகர்கள் உயிர்கொடுத்துள்ளனர், படத்தின் பிண்ணனி இசை மற்றும் வசனங்கள் எதார்த்தமாக அமைந்துள்ளது.
குப்பத்தில் வாழும் ஆட்டோ டிரைவர், செருப்பு தைப்பவர் என அனைவரும் சரியான தேர்வாக இருக்கிறார்கள். பாலியல் தொழில் செய்யும் பெண் வரும் காட்சிகளை தவிர்த்து கொஞ்சம் இருக்கலாம். கலை இயக்குனர் ஜெ.கே.மூர்த்தியின் உருவாக்கத்தில் குப்பம் மிக அழகாக உள்ளது. படத்தில் பல காட்சிகளில் நாம் எமோஷனல் கனெக்ட்ஆகி விடுகிறோம் . இயல்பான கதையை இயக்குனர் சிவ பிரசாத் அழகாக இயக்கியுள்ளார்.
மெல்ல நகரும் கதைக்களம் என்பதால் கதையில் பல இடங்களில் தொய்வு தெரிகிறது மேலும் சில இடங்களில் வரும் தமிழ் டப்பிங் தனியாக தெரிகிறது அதை கொஞ்சம் சரி செய்திருக்கலாம். ஒரு தெலுங்கு படம் பார்க்கும் உணர்வை தவிர்க்க முடிவதில்லை.
மொத்தத்தில் மகனின் ஆசையை நிறைவேற்ற மௌன போராட்டம் நடத்தும் பல அப்பாக்களுக்கும் இந்த படம் ஒரு சமர்ப்பணம்.