ஹிட் லிஸ்ட் திரைப்படம் விமர்சனம் தமிழ் சினிமாவில் தமிழ் சினிமா வரலாறு மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக இருக்கும் அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் அட்லீஸ்ட் இந்த படத்தை ஒரு பிளாக்பஸ்டர் ரவிக்குமார் தயாரித்துள்ளார் அவரது உதவியாளர்கள் சூரியகதிர் காக்கலர் மற்றும் கே.கார்த்திகேயன் இயக்கியுள்ளனர்.
இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அனுபமா குமார், ராமச்சந்திரா ராஜு, முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு அறிமுக ஹீரோவுக்கான கதையை வடிவமைத்து அவரை நிலை நிறுத்தும் எண்ணத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தை தந்திருக்கிறார்கள்.
மிடில் கிளாஸ் இளைஞன் அம்மா தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் திடீரென அவர் என் அம்மாவும் தங்கையும் கடத்தப்படுகிறார்கள் முகமூடி அணிந்த வில்லன் அவரை மிரட்ட ஆரம்பிக்கிறான் போலீஸ் உதவி கொண்டு முதலில் அவனை கண்டுபிடிக்க முயல்கிறான் ஹீரோ ஆனால் நடக்காமல் போவது முகமூடி அணிந்த வில்லன் செய்யும் சொல்லும் செயல்களை செய்ய ஆரம்பிக்கிறார் ஆனால் அந்த வில்லனோ வரிசையாக கொலைகள் செய்ய சொல்கிறான் இதிலிருந்து ஹீரோ தப்பித்தாரா அவரது அம்மா தங்கையை காப்பாற்றினார் போலீஸ் அவர் காப்பாற்றுகிறதா இந்த கேசுக்கு பின்னால் இருக்கும் என்பது தான் திரைப்படம்.
கடையநல்லூர் மிக சுவாரசியமாகவே இருக்கிறது அதுவும் படம் ஆரம்பித்த நொடியிலே கதை கொள்ளும் போய் விடுகிறார்கள் எதற்காக இப்படி எல்லாம் செய்கிறான் ரசிகர்களுக்கும் பரவி பரவி விட்டது பரவ விட்டிருப்பது படத்தின் பலம்
அறிமுக ஹீரோ விஜய் கனிஷ்காவிற்கு நடிப்பு, ஆக்சன் எல்லாம் நன்றாக வருகிறது. வரும் காலத்தில் நல்ல ஹீரோவாக வரும் தகுதி அவரிடம் நன்றாகவே தெரிகிறது. பல வருடங்கள் கழித்து திரும்பி இருக்கும் சித்தாரா, படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஆனால் தனக்கு என்ன கொடுக்கப்பட்டிருப்பதை சிறப்பாக செய்திருக்கிறார்.
போலீஸ் கமிஷனராக சரத்குமார், டாக்டராக கௌதம் மேனன் இருவரும் படத்திற்கு ரசிகர்களை ஈர்க்க பலம் சேர்த்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் படத்தில் பெரிதாக எந்த பங்கையும் தரவில்லை. அதற்கான திரைக்கதையுன் படத்தில் இல்லை. அதிலும் கமிஷனராக வரும் சரத்குமார் ரொம்ப வீக்காக இருக்கிறார். எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் வில்லனை கண்டுபிடிக்க முடியாமல் இறுதியில் வசனம் மட்டும் பேசுகிறார். படத்திற்கும் ஹீரோவுக்கும் பலம் சேர்க்க மட்டுமே அவரை சேர்த்திருப்பது போல் தெரிகிறது.
படத்தில் ஹீரோயின் இல்லை பாடல்கள் இல்லை ஒரு திரில்லர் படத்திற்கு இது நல்ல முடிவு.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தின் உருவாக்கம் தான். கிட்டத்தட்ட 10, 20 வருடங்களுக்கு முந்தைய ஸ்டைல் சினிமா உருவாக்கம் தான் இந்த படத்திலும் இருக்கிறது. 2024 இல் படத்தின் உருவாக்கம் பெரிதாக மாறிவிட்டது. ஒரு காட்சியை மிக மெதுவாக எடுத்து, மிக மெதுவாக எடிட் செய்து, வெளியிட்டால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கிறது இந்த திரைப்படம். கதையில் இருக்கும் பரபரப்பு காட்சிகளில் இல்லை. நல்ல கதையும் நல்ல நடிகர்களின் பங்களிப்பு இருந்தும் கதையின் பரபரப்பை ரசிகனுக்கு கடத்துவதில் தடுமாறி இருக்கிறது படக்குழு.
படத்தின் மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் முயன்று இருந்தால் சுவாரசியமான திரில்லர் சினிமாவை தந்திருக்கலாம். ஆனாலும் இதை மோசமான சினிமா என்று சொல்லிவிட முடியாதளவு உழைத்திருக்கிறார்கள். ஹிட்லிஸ்ட் ஒரு முறை தரிசிக்கலாம்.