சிவப்பு மனிதர்கள் :- சில்க் ஸ்மிதா பாணியில் சோனா!

இதுவரை கவர்ச்சி நடிகையாகவே வலம்வந்த சோனா முதல்முறையாக கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடிக்கும் புதிய படம் BTK பிலிம்ஸ் தயாரிப்பு வரும் சிவப்பு மனிதர்கள் இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் , மீனாட்சி சர்க்கார், புதுமுகம் சத்யா, அனு கிருஷ்ணா, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராஜசிம்மன், கஞ்சா கருப்பு, ஆதிஷ் பாலா, பெஞ்சமின், வேல்முருகன், வம்சம் தொலைக்காட்சித் தொடரில் பூமிகா கேரக்டரில் நடித்த சந்தியா, லேகா ஸ்ரீ, உமா, மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தில்

1980,1990 காலகட்டங்களில் தவிர்க்கமுடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை 1981 வெளிவந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா  தன் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்து வியக்க வைத்தார்

 

அந்த வழியில் இந்த காலகட்டத்தில் தன் கவர்ச்சியால் ரசிகர்களை மிரட்டி வந்த சோனா முதல்முறையாக சிவப்பு மனிதர்கள் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி அன்பு சரவணன் இயக்கி வருகிறார்

இணை தயாரிப்பு S.N. சுரேஷ் B.com
தயாரிப்பு B.T. அரசகுமார் M.A