காதல் எனும் பெயரிலான வன்முறை ? – லவ்வர் !!

மணிகண்டன், கௌரிப்பிரியா நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்

இண்றைய தலைமுறையின் டாக்ஷிப் உறவைப்பற்றிப் பேசும் படம்.

உலகின் மிகப்பெரிய் ஆயுதம் அன்பு. அன்பின் பெயரால் நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் செலுத்தும் வன்முறை மிகக்கொடூரமானது. உலகம் முழுக்க ஆண் பெண் உறவென்பது, இன்னுமே மிகச்சிக்கலானதாகவே இருக்கிறது. பெண்ணை இன்னும் அடிமையாக நினைக்கும் ஆணின் எண்ணம் இன்னும் மாறவில்லை.

ஒரு வகையில் டாக்ஷிப் ரிலேஷன்ஷிப் மீதான கவனமும் பேச்சும் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமான படியை எடுத்து வைத்துள்ளது.

நமது சமூகத்தின் ஆண்கள் தான் காதலிக்கும் பெண் மீது காட்டும் வன்முறையை உணர்வதே இல்லை. அவர்கள் அதை அன்பாகவே நினைக்கிறார்கள், ஒரு ரிலேஷன்ஷிப்பில் பெண்ணுக்கு தான் சுதந்திரம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். அவளுக்கு சுதந்திரம் தர தான் யார் என்ற கேள்வி அவர்களுக்கு எழுவதேயில்லை. இதைத் தான் இப்படம் படம் போட்டு காட்டியிருக்கிறது.

இப்படம் காதலின் இனிமையை, இன்பத்தை படம்பிடிக்கவில்லை, மாறாக டாக்ஷிப் ரிலேஷன்ஷிப்பை நெருக்கமாக காட்டி அதில் நிகழும் வன்முறையைக் காட்டுகிறது. பல ஆக்சன் படங்களில் காட்டும் இரத்தம் கொலை வன்முறையைக் காட்டிலும் இது மிகப்பெரிய வன்முறை. இதை சமூகம் புரிந்து கொண்டால் ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நடைபோடும்.

படத்தில் வரும் யாருமே நடிகர்களாக தெரியவில்லை, அப்படியே வாழ்க்கையை படம் பிடித்த மாதிரி இருக்கிறது அவர்களின் நடிப்பு அத்தனை சிறப்பு. இப்படடியானதொரு லவ்வர் பாத்திரத்தைச் செய்ய, எத்தனை தைரியமும், தேடலும் இருக்க வேண்டும். மணிகண்டன் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம். அவருக்கு பக்கத்தில் கௌரிப் ப்ரியா அசத்தியிருக்கிறார். அத்தனை தவிப்புகளையும் தன் மீது தவறே இல்லாமல் இருந்தாலும் பெண்களுக்கு ஏற்படும் கில்டி உணர்வையும் அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
என்றாவது ஒரு நாள் நாம் கண்ணா ரவி பாத்திரமாக மாறுவோம் அத்தனை பக்குவமான ரோல். வாழ்த்துக்கள்.

ஷான் ரோல்டன் படமெங்கும் உணர்வுகளின் வலியை இசையால் மீட்டுகிறார். கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு மனித உணர்வுகளை படம்பிடித்துள்ளது

சுதந்திரம் கொடுக்க நீ யாரு?, உன் அம்மாகிட்ட கேட்பியா உன் அப்பாவுக்கு இன்னொரு சான்ஸ் தரச்சொல்லி?, இப்படி படம் முழுக்க வரும் எளிய வசனங்கள் அத்தனை அழுத்தம். உண்மையா லவ் பண்ணிருந்தா இப்படி பண்ண மாட்ட?, .

தன் முதல்படத்தில் மிகதேவையான ஒரு கருத்தை மிக தைரியாமாக எந்த கம்பரமைஸும் இல்லாமல் மிகத்தெளிவாக ஆழமான படைப்பாக தந்திருக்கிறார் இயக்குநர் பிரபு ராம்