வால்டர் படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? – சிபிராஜ் விளக்கம்!

ஒரு ரெண்டு , மூணு வருசத்துக்கு முன்னாடி அன்பரசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு வால்டர் என்று தலைப்பு வைச்சு. இதுலே அர்ஜுன், ஜாக்கி ஷெராப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றாய்ங்க அப்படீன்னு தகவல் வந்துச்சு. அதை கொஞ்சூண்டு விரிவா சொல்ற துன்னா அர்ஜுன், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்கார வேலன் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் தலைப்பு, படத்தின் கதாநாயகன் பெயரை இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி அறிவிப்பார் என கூறி இருந்தாய்ங்க. அதன்படி லிங்குசாமி அந்த படத்தின் தலைப்பு வால்டர் என்றும் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு என்றும் அறிவிச்சார்.

அப்பாலே என்ன குழப்பபோ இந்த பிராஜக்ட் குறித்த நூஸ் எதுவும் வல்லை..

இந்த நிலையில் பிரபு திலக் என்ற தயாரிப்பாளர், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே படமாகத் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டு அந்தப் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன. இதனைக் கேள்விப்பட்டு ஷாக் அடைஞ்ச தயாரிப்பாளர் சிங்கார வேலன். ‘வால்டர்’ படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் தன் வசமே இருக்கிறது என்றும் அப்படி இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிச்சு வழக்கெல்லாம் போட்டார் சிங்காரவேலன்.

இதையடுத்து, ரெண்டு மூனுக் கட்டம நடந்த சமரச பேச்சு வார்த்தைக்குப் பின் மனமிறங்கிய சிங்காரவேலன் வால்டர் பட தலைப்பை பிரபு திலக்கிடமே கொடுக்க சம்மதம் தெரிவிச்சதாலே உற்சாகமடைந்த பிரபு திலக் டீம் முழுமூச்சுடன் படப்பிடிப்பு பணிகளை செஞ்சுச்சு.

இதைப் பற்றி இந்த வால்டர் தயாரிப்பாளர் பிரபு திலக் (இவரு யாருண்ணா தமிழகத்தின் முதல் பெண் பெண் ஐ பி எஸ் ஆபீசரான திலகவதி மகனாவார்), “உண்மையில் சிபிராஜ் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாகத் தான் இந்தப் படத்துக்கு ‘வால்டர்’ என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்ட வசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் முடிந்து தலைப்பு எங்கள் வசமானதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது, ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் கோவில் நகரமான கும்பகோணத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை சுவாரசியமான கூறுகள் மூலம் தொகுத்துள்ளார் இயக்குநர் அன்பு.

ஸ்கிரிப்ட்டைக் கேட்கும்போதே ஒரு பார்வையாளனாக என்னை ஆச்சரியப்படுத்தியது. கும்பகோணத்தில் ஒரு க்ரைம் த்ரில்லரைப் படமாக்குவது குறித்த அவரது அடிப்படை யோசனையே எனது கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் கும்பகோணம் என்றாலே பெரும் பாலும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் மற்றும் காதல் படங்களைத்தான் படமாக்குவார்கள். இந்தப் படத்தின் இறுதி வடிவத்தைத் திரையில் பார்க்கும் தினத்தை எண்ணி உற்சாகமாகக் காத்திருக்கிறேன். குறிப்பாக சமுத்திரகனி சார் போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இருப்பதால் அந்த ஆவல் மேலும் அதிகமாகி இருக்கிறது” அப்படீன்னெல்லாம் சொல்லி இருந்ததா சேதி வந்துச்சு,

இப்ப படம் போஸ்ட் புரடொக்‌ஷன் மும்முரமா நடக்குது.. கூடவே இன்னிக்கு ஆடியோ ரிலீஸ் நடக்கப் போகுது. இந்த்க வால்டர் ஆடியோ-வை அந்த கால என்கவுண்டர் புகழ் வால்டர் ஐஅசக் தேவாரம் வெளியிடப் போறதா தகவல் வந்திருக்குது.

இச்சுழலில் சிபிராஜூடம் பேச்சுக் கொடுத்தப்போ, ‘வால்டர்’னு பெயர் கேட்டதும் அப்பாவிற்கு நியாயம் பண்ணனும்னு சின்ன பயம். ஆனால், அவ்வளவு களை கட்டியது கதை. அப்படியே உள்ளே போய் மூட் செட் பண்ணிட்டு அதிலேயே இருந்திட்டேன்… இது ஜஸ்ட் போலீஸ் படம், ஆக்‌ஷன் த்ரில்லர்னு இதை ஒரு வரியில் சொல்லிட முடியாது. ரொம்பப் புதுசா கதறடிக்கிற ஆக்‌ஷனுக்குள்ளே நிறைய உணர்வு பூர்வமான விஷயங்களையும் வெச்சிருக்கார் டைரக்டர் அன்பு. எனக்கும், அன்புக்கும் என்ன ஐடியான்னா… டெக்னிக்கலாவும், ஸ்கிரிப்ட் ஸ்டைல்லேயும் அடுத்த கட்டத்திற்குப் போகிற மாதிரி ஒரு படம் பண்ணணும்கிறதுதான். ‘வால்டர்’ அப்படி வந்திருக்கு.

ஒரு போலீஸ் ஆபீஸரை சுற்றி நடக்கிற கதைதான். கும்பகோணம் மாதிரி இடத்தில் நடக்கிற கதை. ஆனால் இதுவரைக்கும் பார்க்காத கலர்ல படம் இருக்கும். அப்பாவுக்கு ‘வால்டர் வெற்றிவேல்’, சூர்யாவுக்கு ‘காக்க காக்க’, விக்ரமுக்கு ‘சாமி’ மாதிரி எனக்கு ஒரு நல்ல அடையாளமும், வெற்றியும் கொடுக்கும்னு நிச்சயமாக நம்புகிறேன். என்ன ஆச்சரியம்னா ‘வால்டர் வெற்றிவேல்’ பண்ணும்போது அப்பாவுக்கு 38 வயது. நான் 37 வயதில் இந்தப் படம் பண்றேன். எனக்கு டைம் முக்கியமில்லை… இனிமேல் ஒவ்வொண்ணும் பெஸ்ட்டா வரணும்னு நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல டைரக்டரும் நல்ல நடிகனும் மனப்பூர்வமாக இணைந்து கை கொடுக்கும் போதுதான் மேஜிக் நடக்கும். பக்காவான கதை. பக்கபலமாக புரொடியூசர் பிரபு திலக். திலகவதி ஐபிஎஸ் அவர்களின் மகன்.

ஒரு போலீஸ் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படியிருக்கும், செயல்முறைகள், அவர்கள் எப்படி பொது வெளியில் நடந்துக்கணும்னு இருக்கிற விதிமுறைகளை எல்லாம் சில போலீஸ் அதிகாரிகள் கிட்டே தெரிஞ்சிக்க வைச்சார். அது ரொம்ப உபயோகமாக இருந்தது. படத்திற்கு என்ன கேட்டாலும், அதன் மதிப்பு கெடாமல் செய்து கொடுப்பார்.

ஆனாலும் எக்கச்சக்க போலீஸ் படங்கள் வந்திருக்கு… இது என்ன வகை?-ன்னு அலட்சியமா கேக்கறாங்க.. உண்மையிலேயே
இது வேற கதை. வேற கலர். நீங்க சொன்ன ஒவ்வொருத்தரும் அவங்களுக்குரிய நடிப்பை அதில் வைச்சாங்க. காதல், ஆக்‌ஷன், எமோஷன், த்ரில்னு எல்லாமே ‘வால்டரில் இருக்கு. போலீஸ் கதையா 100 படம் பார்த்திருப்பீங்கதான். ‘வால்டர்’ ட்ரீட்மென்ட்டில் பின்னி எடுக்கிற கதை. தீப்பிடிக்கிற ரகத்தில் திரைக்கதையிருக்கு ” அப்படீன்னு பெருமையா சொன்னார்..

ம்.. பார்ப்போம்