ஏண்டா தலையில எண்ண வெக்கல – விமர்சனம் = கொஞ்சூண்டு சிரிப்பு.

ஏண்டா தலையில எண்ண வெக்கல ?

இயக்கம் – விக்னேஷ் கார்த்திக்

நடிப்பு: அஸார், சஞ்சிதா ஷெட்டி.

பேண்டஸி காமெடி ஜானரில் ஒரு படம்.  வார்த்தை விளையாட்டுகள். சமகால சமூகத்தை இளைஞர்களுக்காக இன்ஞினியரிங், பெண்கள் பற்றிய கமெண்ட்கள் இவையெல்லாம் கலந்து கட்டி அதனுடன் தலையில் எண்ண (எண்ணைதான் அப்படி ஆகிவிட்டது) வைக்காததால் ஒருவனுக்கு வரும் பிரச்சனைகள் அதை அவன் சமாளிப்பது தான் கதை.

புதுமுகம் அசார் நடிப்பு நன்றாக இருக்கிறது. எந்த தடுமாற்றமும் இல்லை. ஆனால் அப்படியே நடிப்பில் விஜயை நகலெடுக்கிறார். சஞ்சிதா ஷெட்டி அழகாக இருக்கிறார் ஆனால் அவருக்கான இடம் ரொம்பவும் குறைவு. கதையே இல்லாமல் நகர்கிறது முதல் பாதி. முழுதையும் காமெடி வசனங்கள் கொண்டு நிரப்பியிதுக்கிறார்கள். பேண்டஸி ஐடியா பிடித்தது சரி தான் அதை செயல்படித்யிய விதத்தில் புதுமை ஏதும் இல்லை.

இங்கிலீஸ் தப்புத்தப்பாக பேசும் காமெடிகளும், யோகி பாபு வரும் இடங்களிலும் சிரிக்க வைக்கிறார்கள். ஆபாச வசனங்கள் ரொம்பவும் தூக்கல். கேமரா கோணங்கள் எல்லாம் ஓகே ஆனால் நிறைய இடங்கள் காட்சியே இருட்டாய் இருக்கிறது. லைட்டே இல்லாமல் எடுத்தது போன்று உள்ளது. இசை படத்திற்கு தகுந்தாற் போல் உள்ளது. இயக்குனருக்கு காட்சிகள் அழகாய் எடுக்கும் திறமை இருக்கிறது. திரைக்கதையில் உழைத்தால் இன்னும் மிளிர்ந்திருக்கலாம்.

ஏண்டா தலையில எண்ண வெக்கல கொஞ்சூண்டு சிரிக்க தயாரானவங்க மட்டும் போய் பார்க்கலாம்.

கதிரவன்