காதல் எனும் பெயரிலான வன்முறை ? – லவ்வர் !!

காதல் எனும் பெயரிலான வன்முறை ? – லவ்வர் !!

மணிகண்டன், கௌரிப்பிரியா நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் இண்றைய தலைமுறையின் டாக்ஷிப் உறவைப்பற்றிப் பேசும் படம். உலகின் மிகப்பெரிய் ஆயுதம் அன்பு. அன்பின் பெயரால் நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் செலுத்தும் வன்முறை மிகக்கொடூரமானது. உலகம் முழுக்க ஆண் பெண் உறவென்பது, இன்னுமே மிகச்சிக்கலானதாகவே இருக்கிறது. பெண்ணை இன்னும் அடிமையாக நினைக்கும் ஆணின் எண்ணம் இன்னும் மாறவில்லை. ஒரு வகையில் டாக்ஷிப் ரிலேஷன்ஷிப் மீதான கவனமும் பேச்சும் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமான படியை எடுத்து வைத்துள்ளது. நமது சமூகத்தின் ஆண்கள் தான் காதலிக்கும் பெண் மீது காட்டும் வன்முறையை உணர்வதே இல்லை. அவர்கள் அதை அன்பாகவே நினைக்கிறார்கள், ஒரு ரிலேஷன்ஷிப்பில் பெண்ணுக்கு தான் சுதந்திரம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். அவளுக்கு சுதந்திரம் தர தான் யார் என்ற கேள்வி அவர்களுக்கு எழுவதேயில்லை. இதைத் தான் இப்படம் படம் போட்டு காட்டியிருக்கிறது.…
Read More