நடிகர் மணிகண்டனின் அடுத்த படம் ‘குடும்பஸ்தன்’ !

நடிகர் மணிகண்டனின் அடுத்த படம் ‘குடும்பஸ்தன்’ !

சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் வழங்கும் ’குட் நைட்’ & ’லவ்வர்’ படப்புகழ் நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது! கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறந்ததல்ல. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே ! ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ஒரு இளைஞன் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களும் பல இயல்பான வேடிக்கை நிறைந்த தருணங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என்று பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு படத்திலும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் நடிகர் மணிகண்டன். ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்…
Read More
காதல் எனும் பெயரிலான வன்முறை ? – லவ்வர் !!

காதல் எனும் பெயரிலான வன்முறை ? – லவ்வர் !!

மணிகண்டன், கௌரிப்பிரியா நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் இண்றைய தலைமுறையின் டாக்ஷிப் உறவைப்பற்றிப் பேசும் படம். உலகின் மிகப்பெரிய் ஆயுதம் அன்பு. அன்பின் பெயரால் நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் செலுத்தும் வன்முறை மிகக்கொடூரமானது. உலகம் முழுக்க ஆண் பெண் உறவென்பது, இன்னுமே மிகச்சிக்கலானதாகவே இருக்கிறது. பெண்ணை இன்னும் அடிமையாக நினைக்கும் ஆணின் எண்ணம் இன்னும் மாறவில்லை. ஒரு வகையில் டாக்ஷிப் ரிலேஷன்ஷிப் மீதான கவனமும் பேச்சும் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமான படியை எடுத்து வைத்துள்ளது. நமது சமூகத்தின் ஆண்கள் தான் காதலிக்கும் பெண் மீது காட்டும் வன்முறையை உணர்வதே இல்லை. அவர்கள் அதை அன்பாகவே நினைக்கிறார்கள், ஒரு ரிலேஷன்ஷிப்பில் பெண்ணுக்கு தான் சுதந்திரம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். அவளுக்கு சுதந்திரம் தர தான் யார் என்ற கேள்வி அவர்களுக்கு எழுவதேயில்லை. இதைத் தான் இப்படம் படம் போட்டு காட்டியிருக்கிறது.…
Read More
நடிகர் மணிகண்டன் மற்றும் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!

நடிகர் மணிகண்டன் மற்றும் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!

  அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணா ரவி, 'பருத்திவீரன்' சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துவரும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி வரும் இந்த திரைப்படத்ததை 'குட் நைட்' எனும் வெற்றி படத்தை தயாரித்த எம். ஆர். பி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நஸ்ரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தொடங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து…
Read More
கடைசி விவசாயி படத்தின் இயக்குநர் ம. மணிகண்டன் தேசிய விருது கிடைத்ததற்கு நன்றி கடிதம் எழுதியுள்ளார்!

கடைசி விவசாயி படத்தின் இயக்குநர் ம. மணிகண்டன் தேசிய விருது கிடைத்ததற்கு நன்றி கடிதம் எழுதியுள்ளார்!

கடைசி விவசாயி படத்திற்கு 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது கிடைத்துள்ளது இத்ற்காக அந்த படத்தின்  இயக்குநர் ம. மணிகண்டன் நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அனைவருக்கும் அன்பான வணக்கம். மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “கடைசி விவசாயி” படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடைசி விவசாயி படத்தினில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்காதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகபெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த Vijaysethupathi Production மற்றும் 7cs…
Read More
குட்நைட் வெற்றிக் கூட்டணியின் அடுத்த படைப்பு ! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார்!

குட்நைட் வெற்றிக் கூட்டணியின் அடுத்த படைப்பு ! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார்!

  பெரியஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட். அந்தபடத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது. இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார். பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கியவேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செகிறார், மேலும் படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் என வலிமையான கூட்டணி அமைந்துள்ளது.இந்தப் படத்தை நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கிறார்.   தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன…
Read More
நடிகர் மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார் –  இயக்குநர் பாலாஜி சக்திவேல்

நடிகர் மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார் – இயக்குநர் பாலாஜி சக்திவேல்

எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றியை பரிசளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர். இதற்கான பிரத்தியேகமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், நடிகர்கள் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், மணிகண்டன், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாகா, கௌசல்யா நடராஜன்,…
Read More
குட் நைட் திரைவிமர்சனம்

குட் நைட் திரைவிமர்சனம்

  இயக்குநர் : விநாயக் சந்திரசேகர் நடிப்பு : மணிகண்டன், மேகா ரகுநாத், ரமேஷ் திலக் இசை : சான் ரோல்டன் தயாரிப்பாளர் : மகேஷ் ராஜ் பெசிலியன் எப்போதாவது பூக்கும் குறிஞ்சிப்பூக்களில் ஒன்றாக மலர்ந்திருக்கிறது குட்நைட். ஒரு சிறு குறட்டை எத்தனை பிரச்சனையாகும். அதுதான் படமே !! ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மோகன் (மணிகண்டன்) ஐடியில் வேலை செய்து வருகிறான் அவன் தூங்கும் போது, தான் விடும் குறட்டை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அந்தக் குறட்டையால் தன் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற பல இடங்களில் அவமானப்படும் அவனை ஒரு கட்டத்தில் அதனை காரணம் காட்டி காதலியும் கைவிட்டு சென்று விடுகிறாள்.இப்படி விரக்தியின் உச்சத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் மோகனின் வாழ்க்கையில் தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் அனு அறிமுகம் ஆகிறாள். அனுவிடம் கடைசி வரை தன்னுடைய குறட்டை பிரச்சினையை மறைத்து கல்யாணம் செய்து கொள்கிறான். இரவு வாழ்க்கையில் குறட்டை…
Read More
குறட்டையை மையப்படுத்தி தயாராகும் ‘குட் நைட்’!

குறட்டையை மையப்படுத்தி தயாராகும் ‘குட் நைட்’!

'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குட் நைட்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'குட் நைட்'. இதில் 'ஜெய் பீம்' மணிகண்டன்  கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்குநராக ஸ்ரீகாந்த் கோபால் பணியாற்ற, பட தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும்…
Read More
குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து ‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து ‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து 'ஜெய்பீம்' புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம் விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர். படத்தில் மணிகண்டன் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை…
Read More
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’.   கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த அபிப்ராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தியேட்டர் வசூலில் தயாரிப்பாளருக்கு சாதகமாக அமையவில்லை.. இருப்பினும் 'கடைசி விவசாயி' படத்தை பார்த்த ரசிகர்கள் கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி ஐயா அவர்களையும், உலகத்தரம் வாய்ந்த படத்தைத் தயாரித்து அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாழ்ந்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டினார்கள். பல திரையரங்குகளில் படம் நிறைவடைந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று அரங்கம் அதிர கரவொலி எழுப்பி…
Read More